புதிய போஸ்டரை வெளியிட்ட 'டாக்டர்' படக்குழு: வைரலாக்கும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்!

  • IndiaGlitz, [Tuesday,March 02 2021]

சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டாக்டர்’. இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்து வரும் 26ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் புதிய போஸ்டரை இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் சற்று முன் வெளியாகி உள்ளது. இந்த போஸ்டரில் சிவகார்த்திகேயன் அட்டகாசமான லுக்கில் உள்ளார். மேலும் நாயகி பிரியங்கா மோகன், பிக் பாஸ் புகழ் அர்ச்சனா, யோகி பாபு, இளவரசு உள்பட பலர் உள்ளனர். வித்தியாசமாக டிசைன் செய்யப்பட்டுள்ள இந்த போஸ்டரை சிவகார்த்திகேயன் ரசிகர்கள் தற்போது வைரலாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

‘டாக்டர்’ திரைப்படம் வெளியாக இன்னும் மூன்று வாரங்கள் மட்டுமே இருப்பதால் படத்தின் புரமோஷனை முழுவீச்சில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். டீசர், டிரைலர் உள்பட இந்த படத்தின் அடுத்தடுத்த அதிரடி அறிவிப்புகள் வெகு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

'பிகில்' பட நடிகர் மகனுக்கும் பிரபல நடிகைக்கும் திருமணமா?

தளபதி நடிப்பில் உருவான 'பிகில்' திரைப்படத்தில் வில்லனாக நடித்த ஜாக்கி ஷெராப் மகனுக்கும் பிரபல நடிகை ஒருவருக்கும் திருமணம் என்ற வதந்தி சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது 

வரலட்சுமி குடும்பத்தில் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்ட மேலும் ஒருவர்!

தமிழ் திரையுலகின் பிரபல நடிகை வரலட்சுமியின் தாயார் நேற்று கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்டார் என்ற தகவல் வெளியானது என்பதும் இது குறித்த வீடியோவை அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு

விதவிதமான அவுட் ஃபிட்களில் கலக்கும் காஜல்… இன்ஸ்டாவில் வைரலாகும் புகைப்படம்!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால்.

ஊதா கலரு ரிப்பன் நடிகையின் மேக்கப் இல்லாத வைரல் புகைப்படங்கள்!

இன்றுவரை தனது அலட்டிக் கொள்ளாத எளிமையான நடிப்பின் மூலம் தமிழ் இளசுகளின் கனவுகன்னியாக வலம் வருபவர் நடிகை ஸ்ரீ திவ்யா

ப்ரைடல் உடையில் பாலிவுட் “பேபி டால்“… நெட்டிசன்களை கவர்ந்த வைரல் புகைப்படம்!

ஒரு காலத்தில் அடல்ட் நட்சத்திரமாக அறியப்பட்ட சன்னி லியோன் தற்போது பாலிவுட் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்து இருக்கிறார்.