கொரோனா பரபரப்பு: எதிரொலி: 10 அடி தூரத்தில் நின்று நோயாளியை பரிசோதனை செய்த மருத்துவர்
- IndiaGlitz, [Wednesday,June 10 2020]
கொரோனா பரபரப்பு பலரது இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக மாற்றிவிட்டது என்பது அனைவரும் அறிந்ததே. தனிமனித இடைவெளியை கடைபிடிப்பதற்காக முற்றிலும் தலைகீழாய் மனித வாழ்க்கை மாறியுள்ளது.
இந்த நிலையில் விழுப்புரம் அருகே ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்கு வந்த இளைஞர் ஒருவரை பத்தடி தூரத்தில் நிறுத்தி மருத்துவர் அவரை சோதனை செய்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
விழுப்புரம் அருகே ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தொண்டை வலிக்கு சிகிச்சை பெற இளைஞர் ஒருவர் மருத்துவரை சந்திக்க வந்தார். அந்த இளைஞரை பத்தடி தூரத்தில் நிற்க வைத்த ஆரம்ப சுகாதார அதிகாரி அவரிடம் சளி இருக்கின்றதா? காய்ச்சல் இருக்கின்றதா என்று கேட்டதோடு பத்தடி தூரத்தில் நின்று கொண்டே டார்ச் லைட் அடித்து பரிசோதனை செய்ததாக தெரிகிறது.
இதனை அங்கிருந்த ஒருவர் தனது மொபைல் போனில் வீடியோ எடுத்து அதனை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவருக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் அரசால் வழங்கப்படாததால் வேறு வழியில்லாமல் தனிமனித இடைவெளியை கொஞ்சம் அதிகமாகவே பயன்படுத்தி மருத்துவர்கள் நோயாளிகளை பரிசோதனை செய்து வருவதாக மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.