கருணாநிதி விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார். எச்.வி.ஹண்டே நம்பிக்கை

  • IndiaGlitz, [Saturday,December 17 2016]

முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.கருணாநிதி தற்போது காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை குறித்து காங்கிரஸ், பாஜக, உள்பட பல கட்சிகளின் தலைவர்கள் நேரில் வந்து விசாரித்து செல்கின்றனர்.

இந்நிலையில் பாஜக பிரமுகரும், எம்.ஜி.ஆர் அமைச்சரைவையில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவரும், டாக்டருமான எச்.வி.ஹண்டே இன்று கருணாநிதியின் உடல்நலம் குறித்து நேரில் விசாரித்தார்.

டிரக்யாஸ்டமி குழாய் பொருத்திய பலர் உடல்நலம் பெற்றுள்ளதாகவும், அதேபோல் கருணாநிதியும் உடல்நலம் பெற்று வீடு திரும்புவார் என்றும் ஹண்டே செய்தியாளர்களிடம் நம்பிக்கை தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் தான் எதிர்க்கட்சியில் இருக்கும் போது கருணாநிதி முதலமைச்சராக இருந்தார் என்றும் அதேபோல் தான் அமைச்சராக இருந்த போது அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்ததாகவும், எதிர்க்கட்சி உறுப்பினர்களிடமும் நன்றாக பழகும் தன்மையுடைய கருணாநிதி, எதிர்க்கட்சியினரின் திறமைகளை பாராட்டக் கூடிய பரந்த மனம் படைத்தவர் என்றும் அவர் விரைவில் நலம் பெற வாழ்த்துவதாகவும் தெரிவித்தார்.

கடந்த 1967ஆம் ஆண்டு தி.மு.க. - சுதந்திரா கட்சி கூட்டணியில் பூங்கா நகர் தொகுதியில் போட்டியிட்டபோது அவருக்கு ஆதரவாக கருணாநிதி பிரசாரம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கருணாநிதியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த அதிமுக பிரபலங்கள்

தமிழக அரசியலில் கடந்த பல ஆண்டுகளாக ஆளும் கட்சியும் எதிர்க்கட்சிகளும் எதிரும் புதிருமாக...

ஜனார்த்தன் ரெட்டியின் ஆடம்பர திருமணமும் மனோஜ் முன்னாட்டின் அர்த்தமுள்ள திருமணமும்

சமீபத்தில் இந்திய ஊடகங்களில் தலைப்பு செய்தியாக வெளிவந்த கர்நாடக மாநிலத்தின் முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன் ரெட்டியின் மகள் திருமணம்...

விஷ்ணுவின் அடுத்த படத்தில் ஹன்சிகா நாயகியா?

'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' வெற்றிக்கு பின்னர் விஷ்ணு விஷாலின் அடுத்த தயாரிப்பான 'கதாநாயகன்'...

பொங்கல் ரேஸில் இணைந்த மற்றொரு பிரபல நடிகரின் படம்

வரும் 2017ஆம் ஆண்டு பொங்கல் தினம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பெரும் விருந்தளிக்கும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...

கருணாநிதி நலமுடன் உள்ளார். நேரில் சந்தித்த பின்னர் ராகுல்காந்தி பேட்டி

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்ததாகவும்...