பிரபல ஹீரோவுடன் இணையும் 'டாக்டர்' நாயகி பிரியங்கா மோகன்!

‘டாக்டர்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை பிரியங்கா மோகன் அடுத்ததாக தமிழின் முன்னணி நடிகருடன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்துக்கொண்டிருந்த நடிகை பிரியங்கா மோகன்,சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான ‘டாக்டர்’ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பிறகு சூர்யாவின் ’எதற்கும் துணிந்தவன்’ சிவகார்த்திகேயனின் ’டான்’ஆகிய படங்களில் நடித்துள்ள பிரியங்கா மோகன், அடுத்ததாக ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’தலைவர் 169’ திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இயக்குனர் எம் ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் திரைப்படத்தில் பிரியங்கா மோகன் தான் நாயகி என்றும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் நடித்து கொண்டிருக்கும் பிரியங்கா மோகனுக்கு தமிழ் சினிமாவில் நல்ல எதிர்காலம் இருப்பதாக கூறப்படுகிறது.