கோவிட் நேரத்தில் ஒரு சிரிப்பு மருந்து: 'டாக்டர்' படம் குறித்து பிரமாண்ட இயக்குனர்!
- IndiaGlitz, [Sunday,October 10 2021]
சிவகார்த்திகேயன் நடித்த ‘டாக்டர்’ திரைப்படம் நேற்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் பாசிட்டிவ் விமர்சனங்களை அளித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ‘டாக்டர்’ படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் கொண்டாடி வருகின்றனர். பல திரையுலக பிரபலங்கள் தங்களுடைய சமூக வலைதளப் பக்கத்தில் ‘டாக்டர்’ படத்தை பார்த்து தங்களுடைய பாசிட்டிவ் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘டாக்டர்’ படத்தை பாராட்டி உள்ளார். இந்த கோவிட் நேரத்தில் ‘டாக்டர்’ திரைப்படம் மிகச் சிறந்த சிரிப்பு மருந்தாக உள்ளது என்றும் இயக்குனர் மற்றும் இந்த படத்தின் குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள் என்றும் மிகச்சிறந்த ஃபேமிலி என்டர்டைன்மென்ட் திரைப்படம் என்றும் திரை அரங்குகளில் இந்த படத்தை மீண்டும் பார்த்த அனுபவம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்றும் தெரிவித்துள்ளார். ஷங்கரின் இந்த டுவிட் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் பிரபல இயக்குனர் சேரன் தனது சமூக வலைத்தளத்தில் ‘டாக்டர்’ படம் குறித்து கூறியிருப்பதாவது: ‘டாக்டர்’ பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறார் என்பதும், மக்கள் கூட்டம் திரையரங்கில் படம் காண வந்தார்கள் என்பதும் தேங்கி நின்ற திரையுலகில் பலருக்கு நம்பிக்கை கதவுகளை திறந்திருக்கிறது.. வெற்றிக்கும் விதைத்த நற்செயலுக்கும் பாராட்டுக்கள்’ என்று தெரிவித்துள்ளார்.
#Doctor gave us the best laughter medicine in these covid-times. Hats off to Director @Nelsondilpkumar for making everyone ROFL. Thanks to @Siva_Kartikeyan , @anirudhofficial and the whole team for this family entertainer! Happy to see the theatrical experience is back??????
— Shankar Shanmugham (@shankarshanmugh) October 9, 2021
#Doctor பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறார் என்பதும், மக்கள் கூட்டம் திரையரங்கில் படம் காண வந்தார்கள் என்பதும் தேங்கி நின்ற திரையுலகில் பலருக்கு நம்பிக்கை கதவுகளை திறந்திருக்கிறது.. வெற்றிக்கும் விதைத்த நற்செயலுக்கும் பாராட்டுக்கள் @Siva_Kartikeyan @kjr_studios @Nelsondilpkumar https://t.co/nE1irUs7iK
— Cheran (@directorcheran) October 10, 2021