எமர்ஜென்ஸி அறையில் பணி நேரத்தில் போதையுடன் அரசு டாக்டர்
Send us your feedback to audioarticles@vaarta.com
பொதுவாகவே ஒருசில அரசு டாக்டர்கள் பணி நேரத்தில் சரியாக பணி செய்வது இல்லை என்ற குற்றசாட்டு எழுந்து வரும் நிலையில் உபி மாநிலத்தில் உள்ள டாக்டர் ஒருவர் எமர்ஜென்ஸி அறையில் போதையில் உளறிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த மொராடாபாத் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் உள்ள எமர்ஜென்ஸி அறையில் போதையுடன் ஒரு டாக்டர் நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் மத்தியில் உளறினார். இதை அங்கிருந்த ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளார். இந்த சம்பவம் உபியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உயிரை காப்பாற்றும் டாக்டர்கள் கடவுளுக்கு நிகராக மதிக்கப்பட்டு வரும் நிலையில், டாக்டர் ஒருவரே பணியில் இருக்கும்போது போதையில் இருப்பது கடும் கண்டனத்துக்குரியது என்றும் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com