சினிமாவிற்கு எண்ட்ரி கொடுத்த மருத்துவர்…. இன்னும் யாரெல்லாம் இருக்காங்க தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
சினிமா மீது இருக்கும் ஆர்வத்தின் காரணமாக பணக்காரர்கள் முதற்கொண்டு மருத்துவம் படித்தவர்கள் வரை தொடர்ந்து எண்ட்ரி கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் பல் மருத்துவம் படித்துவிட்டு பயிற்சி செய்துவந்த மருத்துவர் ஒருவர் சமீபத்தில் தமிழ் சினிமாவில் நடிகராகி இருக்கிறார்.
மருத்துவம் படித்துள்ள ஆதித் சுந்தரேஸ்வரர் படிக்கும்போதே ‘தூரிகையே ஓவியமாகாதே’ எனும் குறும்படத்தில் நடித்துள்ளார். தொடர்ந்து ‘ஆ ஆவன்னா’ எனும் குறும்படத்தில் நடித்த இவருக்கு சைமா விருது கிடைத்திருக்கிறது. இதனால் பிரபலமான அவர் இயக்குநர் மிஸ்கினின் உதவியாளரான மீனா குமாரி இயக்கிய ‘பாஸ் பேபி’ என்ற வெப் தொடரில் நடித்திருந்தார். இதையடுத்து ‘யாதுமாகி நின்றாய்’ குறும்படத்தில் நடித்த இவருக்கு மீண்டும் விருது கிடைத்திருக்கிறது.
இதனால் வெள்ளித்திரையில் அறிமுகமான இவர் சரவணன் அருள் நடித்த ‘லெஜெண்ட்’ திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் பத்திரிக்கை துறையைச் சார்ந்த ஹெச்.பாட்சா தயாரித்த ‘நேற்று நீ இன்று நான்’ எனும் குறைந்த செலவில் எடுக்கப்பட்ட திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார்.
மேலும் ‘ஆயிரம்கால் மண்டம்’ திரைப்படத்திலும் ஹீரோவாக நடித்த நிலையில் தற்போது இயக்குநர் சேரன் இயக்கவிருக்கிற வெப் தொடரில் இவர் பிக்பாஸ் ஆரி மற்றும் நடிகர் கலையரசனுடன் இணைந்து நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து மருத்துவம் படித்துள்ள ஆதித் தற்போது தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்தவுள்ளதாகக் கூறப்படுகிறது.
புதுமுக நடிகர் ஆதித்தை தவிர பல நடிகர், நடிகைகள் மருத்துவம் படித்துவிட்டு தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகின்றனர். அவர்களைப் பற்றிய ஒரு தொகுப்பு
நடிகர் அஜ்மல் அமீர் – உக்ரைன் நாட்டிலுள்ள வின்னிட்சியாவில் நரம்பியல் குறித்த மருத்துவப் படிப்பை முடித்த இவர் சினிமா மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக ‘பிப்ரவரி 14’ திரைப்படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து ‘அஞ்சாதே’, ‘கோ’ போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமான இவர் சினிமாவில் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறார்.
நடிகை சாய் பல்லவி- ஜார்ஜியாவில் மருத்துவம் படித்த இவர் சிறிய வயதில் இருந்தே நடனத்தில் மீது தீராத காதல் கொண்டிருந்த நிலையில் சினிமாவில் எண்ட்ரி கொடுத்தார். மலையாளத்தில் ‘பிரேமம்’ திரைப்படத்தில் அறிமுகமான இவர் தற்போது தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக இருந்து வருகிறார்.
நடிகர் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் – காமெடி நடிகரான இவர் மருத்துவம் படித்துவிட்டு பணியாற்றி வந்த நிலையில் சினிமா ஆவர்த்தின் காரணமாக ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ போன்ற திரைப்படத்தில் நடித்து பிரபலமானார். தொடர்ந்து இவர் சினிமாவில் கவனம் செலுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.
நடிகை அதிதி ஷங்கர்- பிரம்மாண்ட இயக்குநரின் மகளான அதிதி ஷங்கர் மருத்துவம் முடித்த கையோடு சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து ‘விருமன்’, ‘மாவீரன்’ திரைப்படத்தில் நடித்து பிரபலமாகியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
நடிகை பிரணீதா சுபாஷ் – மருத்துவம் படித்துள்ள இவர் தமிழ் சினிமாவில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக ‘சகுனி’ திரைப்படத்தில் நடித்து பிரபலமானார். திருமணத்திற்கு பிறகும் தெலுங்கு, கன்னட சினிமாக்களில் அவர் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார்.
நடிகை வித்யா பிரதீப்- கேரளாவில் பிறந்து வளர்ந்தவரான இவர் மருத்துவம் படித்து முடித்துவிட்டு கன்னடம், மலையாளம், தமிழ் சினிமாவில் நடித்துவருகிறார். அந்த வகையில் ‘சைவம்’, ‘அதிபர்’, ‘பசங்க 2’, ‘தலைவி’ போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments