3 நாட்களில் மன்னிப்பு கேட்க வேண்டும்: நடிகை ரைசாவுக்கு மருத்துவர் கெடு

  • IndiaGlitz, [Thursday,April 22 2021]

மருத்துவர் பைரவியின் தவறான சிகிச்சையால் தன்னுடைய முகம் வீங்கி விட்டதாகவும் இதனையடுத்து அவர் ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும் மருத்துவர் பைரவிக்கு பிக்பாஸ் பிரபலம் நடிகை ரைசா வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் தற்போது இந்த வழக்கறிஞர் நோட்டீசுக்கு மருத்துவர் பைரவி பதில் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். தனது சிகிச்சை குறித்து நடிகை ரைசா அவதூறு பரப்பி வருவதாகவும் இதனை அடுத்து அவர் மூன்று நாட்களில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவ்வாறு மன்னிப்பு கேட்காவிட்டால் அவர் மீது மானநஷ்ட ஈடு வழக்கு தொடரப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் ரைசா எனது நற்பெயரை கெடுக்க முயற்சிக்கிறார் என்றும் மருத்துவர் பைரவி குற்றஞ்சாட்டி உள்ளார்

நடிகை ரைசா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பிய நிலையில் மருத்துவர் பைரவி அதற்கு பதில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அடுத்த கட்டமாக ரைசா மன்னிப்பு கேட்பாரா? அல்லது மான நஷ்ட வழக்கை சந்திப்பாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
 

More News

தூத்துகுடி துப்பாக்கி சூடு: 15 கேள்விகளுக்கு பதிலளித்த ரஜினிகாந்த்!

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக அந்த சம்பவத்தை விசாரணை செய்துவரும் விசாரணை ஆணையம் கேட்ட 15 கேள்விகளுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் பதில் கூறியதாக

தனுஷின் 'ரவுடி பேபி' பாடலில் ஒரு விழிப்புணர்வு பாடல்: மருத்துவரின் புதிய முயற்சி

தனுஷ் சாய்பல்லவி நடித்த 'மாரி 2' படத்தில் இடம்பெற்ற 'ரவுடி பேபி' என்ற பாடல் மிகப் பெரிய அளவில் உலகம் முழுவதும் ஹிட் ஆனது என்பதும் யூடியூபில் மிக அதிக பார்வையாளர்களை கொண்ட பாடல்களில் இதுவும் ஒன்று

இன்னா மயிலு, யாரை பார்த்து முறைச்சுகினே: வைரலாகும் சிவகார்த்திகேயன் பாடல்!

பிக்பாஸ் கவின் நடித்துள்ள 'லிப்ட்' என்ற திரைப்படத்தின் சிங்கிள் பாடல் இன்று ரிலீசாக இருப்பதாக ஏற்கனவே கவின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார் என்பதை பார்த்தோம்.

தனக்கு வழங்கப்பட்ட பரிசுத் தொகையை தான் காப்பாற்றிய சிறுவனுக்காக வழங்கிய மயூர் ஷெல்கே

சமீபத்தில் மும்பையில் உள்ள வாங்கனி என்ற ரயில் நிலையத்தில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி தாயுடன் சென்று கொண்டிருந்த சிறுவன் ஒருவன் தவறி தண்டவாளத்தில் விழுந்து விட்டார்.

12-ஆம் வகுப்பிற்கு தொடர் விடுமுறை...! தேர்வு எப்பொழுது...?

12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறைத்தேர்வுகள் நடந்துமுடிந்த நிலையில், தற்போது கொரோனாவால் தொடர்விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.