சமந்தாவிடம் வருத்தம் தெரிவித்த டாக்டர்.. ஆனாலும் நீங்க செய்தது தப்புதான்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மருத்துவ குறிப்பு ஒன்று கூறியதை அடுத்து டாக்டர் ஒருவர் சமந்தாவை சிறையில் அடைக்க வேண்டும் என சர்ச்சைக்குரிய வகையில் பதிவு செய்தது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது அந்த டாக்டர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
நடிகை சமந்தா அவ்வப்போது மருத்துவம், ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு வரும் நிலையில் சமீபத்தில் அவர் ஹைட்ரஜன் பெராக்ஸைடை பயன்படுத்தி சுவாசித்ததால் சில பிரச்சனைகள் தீர்ந்து விடும் என்றும் தேவை இல்லாமல் மருந்து மாத்திரைகளை எடுக்க வேண்டாம் என்றும் கூறியிருந்தார்.
சமந்தாவின் இந்த பதிவுக்கு பெரும் எதிர்ப்புகள் இருந்தது என்பதும் குறிப்பாக டாக்டர் சிரியாக் அப்பி பிலிப்ஸ் என்பவர் சமந்தாவை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். சமந்தா கூறியதை யாரும் அதை செய்ய வேண்டாம் , ஹைட்ரஜன் பெராக்ஸைடை நெபுலைசரில் சுவாசிப்பது ஆபத்தானது என்றும் சமந்தாவுக்கு தண்டனம் தெரிவித்ததோடு அவரை சிறையில் அடைக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த பதிவுகள் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது அந்த டாக்டர் மீண்டும் ஒரு விளக்கத்தை அளித்துள்ளார். மருத்துவம் பற்றிய அறிவில்லாதவர் என்று சமந்தாவை குறிப்பிட்டு அவரை காயப்படுத்துவது என்னுடைய நோக்கம் அல்ல, சமந்தா எந்த தவறான உள்நோக்கத்துடனும் இதை செய்யவில்லை என்று எனக்கு தெரியும், ஆனாலும் இது போன்ற தவறான மருத்துவ முறைகளை கோடிக்கணக்கான ஃபாலோயர்கள் வைத்திருக்கும் பிரபலம் செய்வதால் ஆபத்து இருக்கிறது என்றும் அந்த ஆபத்தை தடுக்கவே கடுமையாக பேசினேன். அதற்காக நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன், ஆனாலும் சமந்தா செய்தது தவறு தான், இனிமேல் அந்த தவறை அவர் செய்யாமல் இருக்க வேண்டும்’ என்றும் அவர் கூறியுள்ளார்.
Ms. Samantha Ruth Prabhu has responded to my "provocative" criticism of her endorsement of unscientific, pseudoscientific and baseless alternative medicine therapies by playing the victim card and endorsing more alternative practices.
— TheLiverDoc (@theliverdr) July 5, 2024
Please note, she is a serial offender in… https://t.co/eRvsXrGlZq pic.twitter.com/iRadZgrHTE
I have been fighting medical/health misinformation for the longest time and it just does not seem to end. I have come to understand that the only way to fight medical misinformation is to consistently speak about it and make examples of people who mislead and misinform.
— TheLiverDoc (@theliverdr) July 6, 2024
Many… pic.twitter.com/YQBHD2Fgq4
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments