ஆஸ்பத்திரியில் அடித்து விளையாடி கொண்ட டாக்டர்-நர்ஸ்!
- IndiaGlitz, [Tuesday,April 27 2021]
உத்தரப்பிரதேச மாநிலத்தில் டாக்டர் ஒருவரின் கன்னத்தில் பளாரென அறைந்த நர்ஸ் ஒருவரின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை செய்யும் டாக்டர்கள் மற்றும் நர்சுகள் வேலை சுமை காரணமாக மன அழுத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ராம்பூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் நேற்று டாக்டர் ஒருவர் நர்சிடம் கொரோனா நோயாளி குறித்து விசாரித்துக் கொண்டிருக்கும் போது திடீரென தகாத வார்த்தையில் பேசியதாகவும் இதனால் அதிர்ச்சி அடைந்த நர்ஸ் டாக்டரின் கன்னத்தில் பளார் என்று அறைந்து விட்டதாகவும் தெரிகிறது.
இதனை அடுத்து ஆத்திரமடைந்த டாக்டர், நர்சை திருப்பித் தாக்கி உள்ளார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டு அங்கு உள்ளவர்கள் டாக்டரையும் நர்சையும் சமாதானப்படுத்தினார்கள். இதுகுறித்த வழக்கை விசாரித்த நீதிபதி கூறியபோது, ‘நான் அவர்கள் இருவரிடமும் பேசினேன். அவர்கள் இருவரும் அதிக வேலைச்சுமை காரணமாக மன அழுத்தத்தில் இருந்ததாக தெரிவித்தனர். இது குறித்து விசாரணை செய்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
டாக்டர் மற்றும் நர்ஸ் ஆகிய இருவரும் மாறி மாறி அடித்து விளையாடிய வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.
#WATCH | A doctor and a nurse entered into a brawl at Rampur District Hospital yesterday.
— ANI UP (@ANINewsUP) April 27, 2021
City Magistrate Ramji Mishra says, "I have spoken to both of them. They say they were under stress and overburdened. We will probe this & speak to both of them."
(Note: Abusive language) pic.twitter.com/XJyoHv4yOh