டிரைவராக மாறி 71 வயது கொரோனா நோயாளியைக் காப்பாற்றிய மருத்துவர்!!! நெகிழ்ச்சி சம்பவம்!!!
- IndiaGlitz, [Saturday,August 29 2020]
கொரோனா பரவல் கட்டத்தில் மருத்துவர்கள் தங்களுடைய நிலையைக்கூட பொருட்படுத்தாமல் மற்றவர்களுக்காக சகிப்பு தன்மையுடன் பணியாற்றுவதைப் பல நேரங்களில் பார்க்க முடிகிறது. அப்படி புனேவில் ஒரு நெகிச்சி சம்பவம் நடைபெற்று இருக்கிறது. 71 வயது முதியவர் ஒருவர் புனேவின் மார்க்கெட் பகுதியில் உள்ள அரசு மருத்துவ மனையில் கடந்த 14 ஆம் தேதி முதல் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது. அவருக்கு திடீரென ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு இருக்கிறது. இதனால் பெரிய மருத்துவமனைக்கு முதியவரை கொண்டு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு இருக்கிறது.
முதியவரின் மகன், மருமகள் என அனைவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நிலையில் முதியவருக்காக செயல்பட யாரும் இல்லாத நிலைமை ஏற்பட்டு இருக்கிறது. இதனால் 35 வயதான மருத்துவர் ரஞ்சித் நிஜாம் அவராகவே ஆம்புலன்ஸ்க்கு போன் செய்திருக்கிறார். அந்த மருத்துமனையில் இருந்த ஆம்புலன்ஸ் டிரைவருக்கு ஏற்கனவே உடல்நலக் குறைவு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் வேறு வாகனங்களையும் அவர் அழைக்க முயற்சி செய்திருக்கிறார். ஆனால் உடனடியாக வாகனங்கள் எதுவும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் கையில் இருந்த ஸ்டெதஸ்கோப்பை வைத்து விட்டு மருத்துவர் ரஞ்சித் நிஜாம் ஸ்டீடிரியங்கை பிடித்து இருக்கிறார். அவருக்கு உதவியாக இன்னொரு மருத்துவரான ராஜ் புரோகித் உடன்வர இருவரும் அருகில் உள்ள பல மருத்துமனைகளில் முதியவருக்காகப் படுக்கையைத் தேடி அழைந்து இருக்கின்றனர். இறுதியில் தனியார் மருத்துவமனை ஒன்றில் படுக்கையைப் பிடித்து முதியவரை அவசரப் பிரிவில் சேர்த்திருக்கிறார். இப்படி துரிதமாகச் செயல்பட்ட இரண்டு மருத்துவர்களும் முதியவரை தற்போது காப்பாற்றி இருக்கின்றனர்.
இதனால் மருத்துவர் ரஞ்சித் நிஜாமுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அவர் வேலைப்பார்க்கும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கொரோனா நோயாளிகள் அவரைப் புகழ்ந்து தள்ளியிருக்கின்றனர். காப்பாற்றப்பட்ட முதியவரின் மகன், மருத்துவர் ரஞ்சித்துக்கு பெரிய மனது. அவர் வாகனத்தை மட்டும் ஓட்டி என்னுடைய அப்பாவை காப்பாற்றவில்லை. மற்ற மருத்துவமனைகளில் அவருக்காக படுக்கையைத் தேடி அலைந்து இருக்கிறார். நானாக இருந்தாலும் இந்தக் காரியத்தை இவ்வளவு எளிதாக செய்திருக்க முடியாது. உரிய நேரத்தில் என்னுடைய அப்பாவைக் காப்பாற்றியிருக்கிறார் எனக் கண்ணீர் மல்க நன்றியைத் தெரிவித்து இருக்கிறார்.