கூகுள் இன்காக்னிடோ பயன்படுத்துகிறீர்களா? உங்களுக்கு சுமார் ரூ.38 லட்சம் கிடைக்க வாய்ப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகில் பெரும்பாலானோர் கூகுள் குரோம் பிரவுசரை தான் பயன்படுத்தி வரும் நிலையில் ஒருசில பயனாளிகள் மட்டும் தங்களுடைய பிரவுசர் ஹிஸ்டரி, குக்கீஸ் உள்ளிட்ட தகவல்கள் சேமிக்கப்படாமல் இருக்கவேண்டும் என்பதற்காக கூகுள் குரோமில் உள்ள இன்காக்னிடோ என்ற மோட்-ஐ பயன்படுத்தி வருகின்றனர். இந்த மோட்-ஐ பயன்படுத்தினால் தங்களுடைய பிரவுசர் ஹிஸ்டரி பாதுகாப்பாக இருக்கும் என்பதும் அவர்களுடைய நம்பிக்கையாக இருந்தது
இந்த நிலையில் தற்போது இதுகுறித்து கலிபோர்னியா நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் இன்காக்னிடோ மோட்-ஐ பயன்படுத்தினாலும் பயனாளிகளின் தகவல்கள் அவர்களை அறியாமல் எடுக்கப்படுவதாகவும் இதனால் பயனாளிகளின் தனிப்பட்ட தகவல்கள் அவர்களுடைய விருப்பமின்றி திருடப்படுவதாகவும் எனவே இன்காக்னிடோ பயன்படுத்தும் ஒவ்வொரு வாடிக்கையாளர்களுக்கும் 5 ஆயிரம் டாலர்கள் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
ஆனால் இந்த குற்றச்சாட்டை கூகுள் நிறுவனம் மறுத்துள்ளது. கூகுள் இன்காக்னிடோ மோட்-ல் ஓபன் செய்யும் போது உங்கள் தகவல்களை இணையதளங்களால் பெற முடியும் என்று தாங்கள் தெளிவாக கூறியிருப்பதாகவும், கூகுள் மட்டுமின்றி மற்ற பிரவுசர்களின் பிரைவேட் மோட்-களிலும் இது நடக்கும் என்றும் விளக்கம் அளித்துள்ளது.
கலிபோர்னியா நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கு ஒருவேளை கூகுளுக்கு பாதகமாக முடிந்தால் கூகுள் இன்காக்னிடோ பயன்படுத்தும் ஒவ்வொருவருக்கும் சுமார் ரூ.38 லட்சம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com