கொரோனாவை விரட்ட பொருட்களை அடிக்கடி கிருமிநாசினி கொண்டு துடைக்க வேண்டுமா???
- IndiaGlitz, [Saturday,May 23 2020]
கொரோனா வைரஸ் எந்தெந்த முறைகளில் பரவும் என்ற தகவல்கள் தொடர்ந்து புதுப்பிக்கப் படாமல், ஆரம்பித்தில் இருந்தே அச்சமூட்டும் வகையில் விழிப்புணர்வு செய்யப் படுகிறது. இந்நிலையில் அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாட்டு மையம் (C.D.C) பொருட்களின் மேற்பரப்புகளின் மேல் இருக்கும் கொரோனா வைரஸ் எளிதில் மனிதனுக்கு பரவாது என்ற வழிகாட்டுதலை வழங்கி இருக்கிறது. இதற்கு பொருள் பொருட்களின் மீதிருக்கும் வைரஸ் மனிதனுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்பதல்ல. பொருட்களின் மீதிருக்கும் கொரோனா வைரஸ் மனிதரிகளின் விரலுக்கு சென்று, தோலில் தங்கி, அடுத்து வாய், கண், மூக்கு போன்ற பகுதிகளை தொடும்போதே பரவுகிறது. எனவே அச்சப்பட வேண்டாம் என ஆலோசனை வழங்குகிறது.
New England journal of Medicine இல் வெளியிட்டப்பட்ட கட்டுரையில் தான் முதன் முதலில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நபர் தும்மும்போதும், இருமும்போதும் வெளிப்படுகின்ற நீர்த்திரவத்தில் இருந்து மற்றவர்களுக்கு பரவி நோய்த் தொற்றை ஏற்படுத்தும் என்ற கருத்து வெளியிடப்பட்டது. தற்போது வெளிவந்துள்ள ஒரு ஆய்வில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நபர்களின் நீர்த்திரவத்தின் மூலமாக வெளிப்பட்டாலும் 8 நிமிடத்தில் இருந்து 15 நிமிடங்கள் வரை மட்டுமே காற்றில் வைரஸால் தாக்குப் பிடிக்க முடியும் எனக் கூறப்பட்டுள்ளது. எனவே கொரோனா வைரஸ்க்கு எதிராக போதுமான வரை அச்சப்படாமல் நெருக்கமான சூழல் மற்றும் கூட்டங்களை தவிர்ததாலே போதுமானது என்ற கருத்தும் கூறப்பட்டு வருகிறது.
New England journal of Medicine ஆய்விதழில் கடினமான உலோகம் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களின் மீது கொரோனா வைரஸ் 3 நாட்களுக்குக் கூட வாழும் எனக் கூறப்பட்டு இருந்தது. கண்ணாடி பொருட்களின் மீது ஒருநாள் வரையிலும் வாழும் திறனுடையது. அட்டைப் பெட்களிலும் 24 மணிநேரம் வரை வாழும் திறனுடையது. இப்படி வாழும் கொரோனா வைரஸை எதிர்த்து கிருமிநாசிகளை தெளிப்பதும் அவசியமானது தான் என C.D.C ஆலோசனை கூறுகிறது. அதோடு பொருட்களைப் பயன்படுத்தும்போதும் வெளியே செல்லும் போதும் கைப்பிடி, உலோகம், மர பொருட்களை தொடாமல் கவனமாக இருக்க வேண்டும். முடிந்த வரை வாய், கண், மூக்கு போன்ற உறுப்புகளைத் தொடுவதைத் தவிர்க்க வேண்டும்.
முன்னதாக, கொரோனா வைரஸ் உணவுப் பொருட்களின் மூலம் பரவுவதற்கான வாய்ப்பு குறைவு எனவும் உணவுப் பொட்டலங்களின் மீது கிருமிநாசினிகளை தெளிக்க வேண்டாம் எனவும் அறிவுரை வழங்கப்பட்டது. மேலும் C.D.C கூறியுள்ள தகவலின்படி கொரோனா வைரஸ் இன்ஃப்ளூயன்ஸா வைரஸை விட வீரியம் மிக்கதாக இருந்தாலும் அம்மை போன்று ஆற்றல் பெற்றவையாக இல்லை என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் வர்ஜீனியா பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் கொரோனா வைரஸ் பொருட்களின் மேற்பரப்புகளின் மீது தங்கும்போது அதன் அடர்த்தி குறைவாக இருப்பதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.