கொசு மனிதனை ஏன் கடிக்கிறது தெரியுமா??? விஞ்ஞானிகள் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!!!

  • IndiaGlitz, [Saturday,July 25 2020]

 

கொசு என்ற பூச்சியினம் வளர்ச்சியடைந்த மனித இனத்தையே அச்சுறுத்தும் அளவிற்கு பல்வேறு நோய்களைப் பரப்பி வருகிறது. இந்த இனம் ஆதி காலத்தில் இருந்தே இப்படித்தான் இருந்ததா என்றால், கொசுக்கள் ஆதியில் இத்தன்மையைக் கொண்டிருக்கவில்லை எனக் குறிப்பிடுகின்றனர். ஏன் இன்றைக்கும்கூட அனைத்து இனக் கொசுக்களும் மனிதனைக் கடிப்பதில்லை. சில இனங்கள் மட்டும் மனிதனைக் கடித்து நோய்களைப் பரப்புகிறது. இதற்கான காரணத்தைக் குறித்து பிரிட்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் நோவா ரோஸ் ஆய்வு மேற்கொண்டார். அந்த ஆய்வில் இன்னொரு அதிர்ச்சியான தகவலும் வெளியாகி இருக்கிறது.

நியூ ஜெர்சியில் உள்ள பிரிஸ்டன் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் தென் ஆப்பிரிக்கா பகுதிகளில் வாழும் ஏடிஎஸ், ஏஜிஎஃப்டி வகை கொசுக்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப் பட்டன. காரணம் இந்த வகை கொசுக்கள்தான் ஜிகா வைரஸை பரப்புகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. இதிலும் பல இனங்கள் உண்டு. டெங்கு, மஞ்சய் காய்ச்சல் போன்ற நோய்களை ஏற்படுத்தும் கொசு இனங்கள் தன்னுடைய பரிணாமக் காலத்தில் பெரிதாக கடிக்கும் பழக்கத்தைக் கொண்டிருக்கவில்லை. இவை பெரும்பாலும் வறண்ட சூழ்நிலையில் வாழத் தொடங்கியிருக்கின்றன. வறண்ட நிலப் பகுதிகளில் தண்ணீர் தேவையை நிவர்த்தி செய்யும் முறையில்தான் முதன் முதலில் விலங்கு மற்றும் மனிதர்களை கடிக்கத் தொடங்கியிருக்கின்றன. இப்படி ஆரம்பித்த வளர்ச்சி படிப்படியாக பல நோய்களைப் பரப்பும் தன்மைக்கு மாறியிருக்கிறது.

கொசுக்களில் ஏற்பட்ட இந்தப் பரிணாம வளர்ச்சி பல ஆயிரம் ஆண்டுகளாகவே நடைபெற்று வருகிறது எனவும் விஞ்ஞானிகள் சுட்டிக் காட்டுகின்றனர். ஈரப்பதம் இருக்கும் இடங்களில் கொசுக்களால் எளிதாக இனப்பெருக்கதை செய்யமுடியும். இப்படி ஈரப்பதம் இல்லாத இடங்களில் கொசுக்கள் வேறு வழியை நாடுகிறது. ஈரப்பதத்தை ஏற்படுத்து வதற்காகவே மனிதர்களை கடிக்கத் தொடங்கிவிடுகிறது. மலேரியாவைப் பரப்பும் அனோபிலிஸ் கொசுக்கள் பெரும்பாலும் ஈரப்பதத்திலேயே வாழும் தன்மைக் கொண்டது. தொட்டிகள், குளங்கள், தேங்காய் மட்டை போன்ற இடங்களில் மிக எளிதாக வாழ்ந்து இனப்பெருக்கத்தை செய்கின்றன. இவையும் ஈரப்பதம் இல்லாத நேரங்களில் மனிதர்களைக் கடிக்கத் தொடங்கிவிடுகிறது என விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள விஞ்ஞானிகள் கொசுக்கள் ஆதியில் இருந்தே கடிக்கும் பழக்கத்தைக் கொண்டிருக்கவில்லை. வறண்ட தன்மையில் இருந்து தப்பித்துக் கொள்ள மனிதர்களின் ரத்ததைக் குடிக்க ஆரம்பித்து இருக்கிறது. தற்போதும் கூட எல்லா இனக் கொசுக்களும் ரத்தத்தை உறிஞ்சுவதில்லை. ஒரு சில இனங்கள் மட்டும்தான் தொடர்ந்து ரத்ததை உறிஞ்சி கொண்டிருக்கின்றன எனத் தெரிவித்து உள்ளனர்.

More News

பாஜகவை பங்கமாய் கலாய்த்த வனிதா: நடிகர் வெளியிட்ட பரபரப்பு வீடியோ

நடிகை வனிதா திருமணம் குறித்த சர்ச்சைகள் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வைரல் ஆகி கொண்டிருக்கும் நிலையில் இந்தப் பிரச்சினை குறித்து நடிகை கஸ்தூரி, நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், தயாரிப்பாளர்

அரசுடமையானது ஜெயலலிதாவின் 'வேதா இல்லம்': மீட்டெடுப்பேன் என ஜெ.தீபா சபதம்!

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 'வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு சமீபத்தில் முடிவு செய்தது. ஆனால் இதற்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அவரது சகோதரர் தீபக்

எனக்கு எதிராக பாலிவுட்டில் ஒரு கும்பல்: ஏ.ஆர்.ரஹ்மானின் அதிர்ச்சி பேட்டி

சமீபத்தில் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்ட பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கை, பாலிவுட்டில் ஒரு கும்பல் அவருக்கு எதிராக சதி செய்தது என்றும், அவருக்கு கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் தட்டிப்பறித்தது

கொரோனா காலத்திலும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.7,043 கோடி கடன்!!! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!!!

தமிழக அரசு கொரோனா பேரிடர் காலத்தில் முடங்கிக் கிடக்கும் தொழில் அமைப்புகளை மேம்படுத்தும் வகையிலான பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

முதல்முறையாக மாநில முதல்வருக்கு கொரோனா பாதிப்பு: அதிர்ச்சி தகவல்

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பது தெரிந்ததே. குறிப்பாக இந்தியாவில் இன்று காலை நிலவரப்படி 13 லட்சத்திற்கும்