உலகத்தின் முதல் குவாரண்டைன் எப்போது தொடங்கியது தெரியுமா???
Send us your feedback to audioarticles@vaarta.com
14 ஆம் நூற்றாண்டில் பரவிய பிளேக் நோய்த்தான் குவாரண்டைன் என்ற சொற்றொடரை உருவாக்கியது. அக்காலக் கட்டத்தில் கடலோர வெனிஷ் நகரத்திற்கு வரும் கப்பல்கள் அனைத்தும் குறைந்தது 40 நாட்கள் வரையிலும் கடற்கரையில் நங்கூரமிட்டு தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்குப் பின்னரே கப்பல்களின் வருபவர்கள் ஊருக்குள் அனுமதிக்கப் படுவார்கள். இப்படி ஆரம்பித்ததுதான் குவாரண்டைன் எனும் தனிமைப்படுத்தும் பழக்கம். குவாரண்டைன் என்ற சொல் இத்தாலிய குவாண்டா ஜியோர்னி என்ற சொற்றொரடரில் இருந்து உருவாகியது.
இதற்கும் பழங்காலத்திற்கு முன்பே உலகின் முதல் பெருந்தொற்றாக அறியப்பட்டது தொழுநோய் தான். இத்தொற்றை பற்றி யூதர்களின் புனித நூலான தோராவில் குறிப்பிடப் பட்டு இருக்கிறது. உடலில் வெள்ளை நிறங்கள் தோன்றினால் முதலில் 7 நாட்கள் வரையிலும் தனிமைப் படுத்தி வைப்பார்கள். அப்படி தனிமைப்படுத்தியும் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்தால் அடுத்த 7 நாட்களுக்கு தனிமைப்படுத்தப் படும். இந்நிலையிலும் நோய் குணமாக வில்லை என்றால் நிரந்தரமாக ஊரை விட்டு வெளியே அனுப்பப் படுவார்கள். குடும்பத்தினரைப் பார்ப்பதற்குக் கூட அனுமதி மறுக்கப்படும். இப்படி வரலாற்றில் பல தருணங்களில் தனிமைப்படுத்தப் படுதல் என்பது ஒரு முற்று முழுதான தீர்வாகவே கருதப்பட்டு இருக்கிறது.
11 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இஸ்லாமிய மதத் தத்துவவியலாளர் இபின் சினா தான் குவாரண்டைன் என்ற சொல்லை முதன் முதலாகப் பயன்படுத்தினார் எனக் கூறப்படுவதும் உண்டு. அவர் கூறிய தனிமைப்படுத்தும் முறையிலும் 40 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும். இதற்கு மத அடிப்படையில் காரணம் கூறப்படுகிறது. கிறிஸ்துவத்தில் மோசே தொடர்ந்து 40 நாட்கள் வரையிலும் காலை, மாலை வேளைகளில் தியனாம் மேற்கொண்டார் என்றும் இயேசு கிறிஸ்து 40 நாட்கள் பாலைவனத்தில் தியானம் செய்தார் என்றும் வரலாற்று நிகழ்வுகளை இணைத்து காரணம் சொல்லப்படுகின்றன. அதோடு இஸ்லாத்திலும் 40 நாட்கள் தியான முறை உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த முறையே பின்னாட்களில் பல நோய்த்தொற்றுகளிலும் பயன்படுத்தப் பட்டு வருகிறது. 13 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் பரவிய பிளேக் நோயும் அதிக சேதத்தை உண்டுபண்ணின. அந்நேரத்திலும் தனிமைப்படுத்தல் என்ற முறையே கடைபிடிக்கப் பட்டது.
அமெரிக்கா - பழங்காலத்திற்கு முன்பே நோய்த்தொற்றுக்கு எதிராக தனிமைப்படுத்தும் பழக்கம் இருந்து வந்தது. உள்ளூர், நகராட்சி, மாகாணங்கள் எனத் தனித்தனியாக முறைகளில் பல நோய்களுக்கு எதிராக அந்நாட்டில் தனிமைப்படுத்தும் பழக்கம் தொடர்ந்து இருந்து வந்தது. இந்த முறையை வரையறைக்குள் கொண்டு வரவேண்டும் என பலத் தரப்புகளில் இருந்தும் வலியுறுத்தப்பட்டதன் வாயிலாக 1878 இல் கூட்டாட்சி சட்டம் இயற்றப்பட்டது. பின்னர் 1892 இல் வாக்கில் ஐரோப்பாவில் இருந்து வந்த கப்பல்களில் காலாரா நோய்த்தொற்று பரவியது. அப்போதும் தனிமைப்படுத்தப் பட வேண்டிய கட்டாயம் உருவாகிறது. சட்ட நடைமுறையில் அனைத்து மாகணங்களையும் உள்ளடக்கிய அளவில் தேசிய வரன்முறைக் கொண்டு வரப்பட வேண்டும் என்ற குரல்கள் வலுத்தன. அந்த அடிப்படையில் 1921 ஆம் ஆண்டு அமெரிக்காவில் முறையான குவாரண்டைன் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.
சர்வதேச நோய்க்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம், ஒரு நோய்த்தொற்று பாதிக்கப் பட்ட நபரிடம் இருந்தோ அல்லது விலங்குகளிடம் இருந்தோ பரவும் போது அதற்கு முதலில் செய்ய வேண்டியது தனிமைப் படுத்தலையே வலியுறுத்துகிறது. அதன்படி காலரா, டித்தேரியா, காச நோய், பிளேக், சின்னம்மை, மஞ்சள் காய்ச்சல், வைரல் மேஹமோராஜிக் காய்ச்சல், எபோலா, மார்பர்க், காங்கோ கிரிமென், சார்ஸ், மெர்ஸ், தற்போது கொரோனா என்று இந்தப் பட்டியல் நீண்டுகொண்டே இருக்கிறது. நோய்களுக்கு முறையான மருந்துகளும் தடுப்பூசிகளும் கிடைக்காத, தொழில்நுட்ப அறிவு இல்லாத காலக் கட்டத்திலும் தனிமைப்படுத்தல் என்ற முறையால் மட்டுமே நோயைக் கட்டுக்குள் கொண்டு வர முடிந்தது. தொழில் நுட்பமும், அறிவியலும் வளர்ந்த இந்த காலத்திலும் நோய்த் தொற்றுக்கு எதிராக தனிமைப்படுத்தல் மட்டுமே பாதுகாப்பான மருந்தாகக் கருதப் படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments