இந்தியப் பொதுத்துறை நிறுவனங்களின் வரலாறு தெரியுமா???
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியாவில் அதிக வரிவருவாயை கொடுக்கும் இரண்டு டஜன் பொதுத்துறை நிறுவனங்கள் இருக்கின்றன. தற்போது வரை பொதுத்துறையைச் சார்ந்த பெரும்பாலான நிறுவனங்களின் பங்குகள் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் கைவசம் இருந்து வருகிறது. நேரு பிரதமராகப் பொறுப்பு வகித்த 1956 இல் இந்தியாவை தொழில் மயப்படுத்தும் நோக்கில் கட்டமைக்கப் பட்டதுதான் இந்தப் பொதுத்துறை நிறுவனங்கள். பல பொதுத்துறை நிறுவனங்கள் மத்திய அரசால் தனியாகவோ அல்லது மாநில அரசுகளுடன் இணைந்தோ நிர்வகிக்கப் பட்டு வருகின்றன. தற்போது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் சுமார் 300 பொதுத்துறை நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
பொதுத்துறை நிறுவனங்கள் நவரத்தின, மஹாரத்தின மற்றும் மினி ரத்னா என 3 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரிவுகள் நிகரச் சொத்து, நிகர வருமானம், நிகர மதிப்பு, நிகரச் செலவு உள்ளிட்ட 6 பிரிவுகளின் அடிப்படையில் பிரிக்கப் படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. நவரத்தின நிறுவனங்களின் கீழ் 17 அரசு பொதுத்துறை நிறுவனங்கள் இயங்குகிறது. பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், இந்திய கப்பல் போக்குவரத்துக் கழகம் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தப் பிரிவை சேர்ந்த நிறுவனங்கள் ஆகும்.
மஹாரத்தின நிறுவனங்கள் என்ற பிரிவில், 3 வருடங்களுக்கு சுமார் ரூ 25,000 கோடிக்கு மேல் பணபரிவர்த்தனை ஈட்டும் நிறுவனங்கள் அடங்கும். இந்த பிரிவில் சுமார் 10 பொதுத்துறை நிறுவனங்கள் இயங்கி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. மினரத்தின நிறுவனங்களில் மேலும் இரண்டு வகை இருக்கிறது. நிதி நிலைமை ஈட்டும் லாப அடிப்படையில் இவை பிரிக்கப் பட்டுள்ளன. முதல் பிரிவில் சுமார் 75 பொதுத்துறை நிறுவனங்கள் இயங்குகிறது. இந்திய விமான நிலைய ஆணையம், பி.எஸ்.என்.எல், இந்திய ரயில்வே (ஐ.ஆர்.சி.டி.சி) மத்திய சேமிப்பு கிடங்கு கழகம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இவற்றின் வருமானம் குறைந்த பட்சம் ரூ.5000 கோடியாக இருக்கிறது. மேலும் பங்குச் சந்தையிலும் இவை இடம் பெற்றிருக்கின்றன.
கடந்த ஆண்டு ONGC, IOC, Gail, NTPC போன்ற நிறுவனங்களின் 51 சதவீதப் பங்குகள் தனியாருக்கு விற்கப்படும் என பேச்சப்பட்டது. நிறுவனங்கள் தனித்து இயங்க முழுச்சுதந்திரம் அளிப்பதற்காக இந்நடவடிக்கை எடுக்கப் படுவதாகவும் செய்திகள் வெளியானது. தற்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கொரோனா நிவராண நிதி பற்றி அறிக்கை வெளியிட்ட போது மேலும் பல பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு விற்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டார். இதுகுறித்து அதிகாரம் பறிப்போகும் எனப் பல தரப்புகளில் இருந்தும் எதிர்ப்பு தெரிவிக்கப் பட்டு வருகிறது. ஆனால் மத்திய அரசு இந்த நிறுவனங்களை தனியார் வசம் ஒப்படைக்கப் படும்போது தொழில் துறை மேலும் வளர்ச்சி அடையும் என நம்பிக்கை அளித்து வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com