அக்னி நட்சத்திரம் பிறந்த கதை தெரியுமா? கேளுங்கள் ஆடியோ வடிவில்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழர்கள் தங்களைச் சுற்றியுள்ள இயற்கை, தட்பவெட்ப நிலையையும் அதன் மாற்றங்களையும் கூட புனித தேவதைகளாகத்தான் புரிந்து கொள்கின்றனர். அந்த அடிப்படையில்தான் அக்னி தேவன் எனும் ஒரு இயற்கை தெய்வமும் ஆதிகாலத்தில் இருந்து தொடர்ந்து வருகிறது. இந்த அக்னி தேவன் ஒரு நட்சத்திரமாகக் கருதப்பட்டாலும் சோதிடத்தில் சொல்லப்படும் 27 நட்சத்திரங்களில் ஒன்றாக இடம்பெறுவது இல்லை.
இதனால் சித்திரை மாதம் பரணி நட்சத்திரம் 4 ஆம் பாதத்தில் தொடங்கி ரோகிணி முதல் பாதம் வரை சூரியன் சஞ்சரிக்கும் காலத்தை சோதிடர்கள் அக்னி நட்சத்திரக் காலம் எனப் பஞ்சாங்கத்தில் கணித்து உள்ளனர். அந்த அடிப்படையில் வானியலும் சோதிடமும் கூறும் அக்னி நட்சத்திரக் காலக்கட்டம் இந்த ஆண்டு (2021) இன்று (மே 4) மே 28 ஆம் தேதி வரை நீடிக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.
கார்த்திகை நட்சத்திரத்தின் தேவதை தெய்வம்தான் இந்த அக்னி பகவான். கார்த்திகை என்பது நெருப்பை தாங்கும் சக்திக் கொண்டது. சோதிட நூல்களும் அப்படித்தான் சொல்கின்றன. அந்த அடிப்படையில் எரிப்பை உமிழும் தன்மைக் கொண்ட அக்னி பகவான் ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் கோடைக் காலத்தில் வந்து விடுகிறான். இந்தக் காலக்கட்டத்தில் பெருந்தொற்று நோய்களும் மக்களை தாக்குகின்றன.
பொதுவா அக்னி காலக்கட்டங்களில் விலங்கு மற்றும் மனிதர்களுக்கு அம்மை நோய்கள் ஏற்பட்டு பெரிய பாதிப்பை கொடுத்து விடும். ஆனால் இந்த 2021 ஆம் ஆண்டில் பெருந்தொற்றுக்கு பஞ்சமே இல்லை எனும் அளவிற்கு கொரோனா நோய்த்தொற்று தீவிரம் அடைந்து இருக்கிறது.
இந்நிலையில் அக்னி நட்சத்திரம் என்பதும் அதன் நெருப்பு தன்மையும் ஏன் இவ்வளவு வீரியம் பெற்றவையாக இருக்கின்றன? அக்னி என்ற தெய்வம் எப்படி தோன்றியது? இந்தக் காலக்கட்டத்தை எப்படி கடப்பது என்பது போன்ற கேள்விகளுக்கு விளக்கம் அளித்து பிரத்யேக ஆடியோ vaata ஆப்பில் கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த ஆடியோ அக்னி தேவனைப் புரிந்து கொள்வதற்கு துணையாக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments