அமெரிக்க அதிபர் டரம்ப் கொரோனாவில் இருந்து தன்னை எப்படி காத்துக் கொள்கிறார் தெரியுமா???

  • IndiaGlitz, [Wednesday,May 20 2020]

 

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் செய்தியாளர்களிடம் பேசும் போதும், பொது வெளியில் தோன்றும் போதும் மாஸ்க் போன்ற எந்த பாதுகாப்பு கருவிகளையும் பயன்படுத்துவது இல்லை. அந்நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் பல முறை எச்சரித்தும் அதை தவிர்த்தே வருகிறார். அதோடு “மருத்துவர்கள் மாஸ்க் அணிந்தால் கொரோனாவில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் எனக் கூறுகிறார்கள். ஆனால் நான் அதை அணிய மாட்டேன்” என்ற மக்களிடமும் பேசியிருந்தார். இந்நிலையில் தனது தனிப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கை என்ன என்பதைப் பற்றி அதிபர் ட்ரம்ப் தகவல் தெரிவித்து இருக்கிறார்.

அதிபர் ட்ரம்ப் செய்தியாளர்களிடம். “எனக்கு கொரோனா நோய்த்தொற்று இருக்கிறதா என அறியும் பொருட்டு ஒரு நாளைக்கு இருமுறை கொரோனா பரிசோதனை செய்கிறார்கள். இது எனக்கு பிடிக்கவில்லை. அதிபராக இருப்பதால் அவ்வப்போது பரிசோதனை நடத்துகின்றனர். எல்லா பரிசோதனையிலும் நெகட்டிவ் என்றே முடிவு வருகிறது. எனக்கு கொரோனா வைரஸ் தொடர்பான எந்த அறிகுறியும் இல்லை. எனினும், நான் மலேரியா காய்ச்சலுக்கு வழங்கப்படும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தைச் சில வாரங்களாகச் சாப்பிட்டு வருகிறேன். அத்துடன் ஸிங்க் சல்பேட் மாத்திரையையும் எடுத்துக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

மேலும், இந்த மாத்திரைகளைப் பற்றி தான் அதிக தகவல்களை தெரிந்து வைத்திருப்பதாகவும் பலரும் இந்த மாத்திரைகளை சாப்பிடுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக கொரோனா நோய்க்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் இந்த மருந்துகளை எடுத்துக் கொள்வதாக அதிபர் தெரிவித்தார். சில வாரங்களாக இந்த மருந்துகளை நான் தொடர்ந்து சாப்பிட்டு வருகிறேன். ஒரு கட்டத்தில் இதை நிறுத்திவிடுவேன் எனவும் அதிபர் குறிப்பிட்டு இருக்கிறார். முன்னதாக ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் நல்ல பலனைத் தருவதாகவும் கொரோனா சிகிச்சைக்கு இந்த மருந்து நல்ல பலனைக் கொடுப்பதாகவும் அதிபர் ட்ரம்ப் பேசியிருந்தார். அதையடுத்து இந்தியாவில் இருந்து ஏற்றுமதியும் செய்யப்பட்டது.

மேலும், நியூயார்க்கை சேர்ந்த மருத்துவர் ஒருவர் இந்த மருந்தை குறித்து தனக்கு கடிதம் எழுதியிருப்பதாகவும் செய்தியாளர்களிடம் பேசியிருந்தார். ஆனால் அமெரிக்க விஞ்ஞானிகளே இந்த மருந்தை கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்தாக ஏற்றுக் கொள்ள மறுப்புத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் கொரோனாவின் தீவிர பாதிப்பு நிலையில் மட்டுமே இந்த மருந்து பயன்படுத்தப் பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

இயக்குனர் லிங்குசாமியின் அடுத்த படம் குறித்த முக்கிய அறிவிப்பு

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் மூலம் பல வெற்றித் திரைப்படங்கள் உருவாகி உள்ளது என்பது தெரிந்ததே

'முந்தானை முடிச்சு' ரீமேக்: பாக்யராஜூடன் கைகோர்க்கும் பிரபல ஹீரோ

பாக்யராஜ், ஊர்வசி நடிப்பில் ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பில் கடந்த 1983ம் ஆண்டு வெளிவந்த 'முந்தானை முடிச்சு' திரைப்படம் மிகப் பெரிய ஹிட்டானது என்பது தெரிந்ததே.

சூப்பர் ஹிட் படத்தின் 2ஆம் பாகம்: மீண்டும் கமல் நடிப்பாரா?

மோகன்லால், மீனா நடிப்பில் இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் 'த்ரிஷ்யம்' என்ற திரைப்படம் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது.

புதிய வைரஸ்: பயனாளிகள் ஜாக்கிரதை

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மனித இனத்தையே ஆட்டிப்படைத்து வரும் நிலையில் தற்போது புதிய வைரஸ் ஒன்று தோன்றி வங்கியில் கணக்கு வைத்திருக்கும் பயனாளிகளை மோசடி செய்து வருவது

ஒரே நாளில் 5000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு: இந்தியாவில் கொரோனா நிலவரம்

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தில் இருந்து மூவாயிரமாக மட்டுமே இருந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 5000க்கும்