கொரோனாவிற்கு அமெரிக்க அதிபர் அளித்த நன்கொடை எவ்வளவு தெரியுமா???
Send us your feedback to audioarticles@vaarta.com
அமெரிக்காவில் கொரோனா பரவல் தொடர்ந்து நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கொரோனா நெருக்கடியைச் சமாளிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது ஒரு வருட சம்பளத்தை நன்கொடையாக வழங்கி இருக்கிறார். இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் “என்னுடைய ஆண்டு வருமான 4 லட்சம் அமெரிக்க டாலர்களை அரசுக்கே திருப்பி அளிக்கிறேன்” எனத் தெரிவித்து இருக்கிறார். இந்த தொகை இந்திய மதிப்பில் 3,03,38, 000 ரூபாய் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒருபக்கம் கொரோனாவிற்கு தனது ஒரு ஆண்டு வருமானத்தையே நன்கொடையாக வழங்கியிருந்தாலும் இன்னொரு சர்ச்சையிலும் அதிபர் சிக்கியிருக்கிறார். கடந்த வாரத்தின் இறுதியில் அதிபர் ட்ரம்ப் கோல்ப் விளையாடுவது போல சில புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு கடும் அழிவுகளை ஏற்படுத்தி வரும் நிலையில் அதிபர் இப்படி பொறுப்பு இல்லாமல் கோல்ப் விளையாடி மகிழ்ந்து வருகிறார் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவரை விமர்சனம் செய்திருக்கின்றனர். அமெரிக்காவின் எதிர்க் கட்சியாக விளங்கும் மக்கள் குடியரசு கட்சி ஜோ பிடன் அவர்களை வேட்பாளராக அறிவித்து உள்ளது. கொரோனா நேரத்தில் அதிபர் ட்ரம்பை விட இவருக்கு அமெரிக்க மக்களின் ஆதரவு அதிகரித்து இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் அதிபர் ட்ரம்ப் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தவறி விட்டார் என்றும் வார இறுதியில் கோல்ப் விளையாடி வருகிறார் என்றும் விமர்சனங்கள் வர ஆரம்பித்து விட்டன.
இந்த விவகாரங்களைத் தவிர அதிபர் ட்ரம்ப் கொரோனா சிகிச்சைக்கு ஹைட்ராக்ஸிகுளோகுயின் மருந்தை பரிந்துரை செய்து இருந்தார். அந்நாட்டின் பல விஞ்ஞானிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கடந்த மார்ச் மாதத்தின் நடுவில் FDA இந்த மருந்தை கொரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்த ஒப்புதலும் வழங்கியது. இந்நிலையில் நேற்று கொரோனா சிகிச்சைக்கு இந்த மருந்து பாதுகாப்பானது அல்ல என்ற தகவலைத் தெரிவித்து WHO இந்த மருந்து பயன்பாட்டிற்குத் தடை விதித்து இருக்கிறது. கொரோனா சிகிச்சைக்கு மட்டுமல்லாமல் நோய் வராமல் தடுக்கவும் இந்த மருந்து உதவும் என்றும் அதிபர் ட்ரம்ப் முன்னதாக கூறியிருந்தார். இவ்வாறு மக்களிடம் நம்பிக்கை அளித்தது மட்டுமல்லாது தானும் இந்த மருந்தை உட்கொண்டதாகவும் செய்தியாளர்களிடம் பேசியிருந்தார். தற்போதைய நிலையில் அதிபர் ட்ரம்ப் ஹைட்ராக்ஸிகுளோகுயின் மருந்துக்கு பரிந்துரை செய்தது தவறு என்பது போன்ற எதிர்மறை கருத்துகள் உலகம் முழுவதும் எழ ஆரம்பித்து இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments