இதுவரை வுஹான் மாகாணத்தில் நடத்தப்பட்ட கொரோனா மறு–பரிசோதனை எவ்வளவு தெரியுமா???
Send us your feedback to audioarticles@vaarta.com
சீனாவில் கொரோனா நோய்த்தொற்று கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டு பல மாகாணங்கள் இயல்பு நிலைமைக்கு திரும்பி இருக்கிறது. இந்நிலையில் முதலில் பாதிப்பை ஏற்படுத்திய வுஹான் மாகாணத்தில் உள்ள அனைவருக்கும் கொரோனா மறு-பரிசோதனையை நடத்தத் மாநில நிர்வாகம் திட்டமிடப் பட்டுள்ளது. இந்தப் பணியில் தற்போது அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
வுஹான் மாகாணத்தில் இதுவரை எவ்வளவு கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டன என்ற தகவலை அம்மாநில ஊடகம் வெளியிட்டு இருக்கிறது. 11 மில்லியன் மக்கள்தொகை கொண்ட வுஹான் மாகாணத்தில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதி மக்களுக்கு இதுவரை மறு-பரிசோதனை செய்யப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஏப்ரல் மாதம் முதல் இந்த பரிசோதனைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத் தக்கது. ஆரம்பத்தில் கொரோனா வைரஸ் வுஹான் மாகாணத்தையே சூறையாடிய நிலையில் மார்ச் மாதம் முதல் நோய் பாதிப்பு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில் புதிய நோய்த்தொற்று எதுவும் பதிவாகததால் கடந்த மார்ச் மாதம் முதல் வுஹானில் ஊரங்கு தளர்த்தப் பட்டது. கடந்த வாரம் வுஹான் மாகாணத்தில் புதிதாக சிலருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து மாநில நிர்வாகம் நோய்த் தொற்று மேலும் புதிய பாதிப்புகளை ஏற்படுத்துமா என்பதைத் தெளிவுப்படுத்த மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனையை நடத்த திட்டமிட்டு இருக்கிறது. அந்தப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் பெரும்பாலான பரிசோதனை முடிவுகள் பெறப்பட்டு உள்ளதாகவும் வுஹான் மாகாண சுகாதாரத் துறை அறிவித்து இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout