எச்சரிக்கை இவைதான் தோல் புற்றுநோய் ஏற்படக்காரணமா ?

  • IndiaGlitz, [Saturday,March 02 2024]

உங்கள் சருமத்தை இயற்கையாகவே ஆரோக்கியமாக பளபளப்பாக வைத்து கொள்ள வேண்டுமா ?

ஒவ்வொரு நாளுமே உங்கள் சருமம் உங்களிடம் என் ஆயுளை அதிகரிக்க செய் என சொல்லும் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா ?ஆம் !நாம் கவனிக்காமல் விடும் ஒவ்வொரு நொடியும் நமது தோல் சருமம் கொஞ்சம் கொஞ்சமாக தன் ஆயுளை இழக்கின்றன.

சரியான தோல் பராமரிப்பு இல்லாததால் தோல் சார்ந்த பல பிரச்சினைகளை நாம் கையாள வேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றன.அதிலும் குறிப்பாக தோல் புற்றுநோய் போன்ற ஆபத்தான சிக்கல்களுக்கு உள்ளாகுகிறோம்.இதை பற்றி இன்னமும் விரிவாக காண்போம்.

சரும பிரச்சனைக்கான காரணம் :


1.தூக்கமின்மை .
2.அதிக நேர சோப்பின் உபயோகம்.
3.செயற்கையான அழகு சார்ந்த பொருட்களின் உபயோகம்.
4.மன அழுத்தம்.
5.அதிகமான கோபம்.
6.அதிகமான வியர்வை .
7.சுத்தமின்மை .
8.ஆரோக்கியமற்ற உணவு பழக்க வழக்கம்.
9.சூரிய ஒளி மாசுபாடு.
10.வளர்ச்சிதை மாற்றம் .

தோல் புற்றுநோய்க்கான அறிகுறிகள் :

1.தோலில் ஏற்படும் மாற்றம்.
2.புண்கள்.
3.மட்சத்தில் மாறுபாடு.
4.தோல் வெடிப்பு.
5.உடலில் வித்தியாசமான புள்ளிகள்.


தோல் பாதுகாப்பிற்கான வழிமுறைகள்:

சருமத்தில் அதிகமான பாதிப்புகள் ஏற்பட முக்கிய காரணம் சூரிய ஒளி மாசுபாடு,வெளிப்புற காரணிகள் ஒரு பக்கம் இருந்தாலும் உட்புற ஊட்டச்சத்து காரணிகள் சரியாக இல்லாமல் இருப்பதும் ஒரு வகை காரணமே.எனவே முடிந்தவரை ஆரோக்கியமான அவகேடோ பழம்,பாதாம்,முட்டை, மீன்,கீரை வகைகள்,பச்சை காய்கறிகள்,எலுமிச்சை பழ சாறுகள்,பீட்ரூட் மற்றும் கேரட் சாறுகள்,பழ வகைகள் அதிகமாக எடுத்து கொள்வது மிகவும் நல்லது.

 

அதிகமான தண்ணீர் அருந்துவது உடலில் உள்ள வெப்பத்தை தணித்து முடிந்த அளவு உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்ள உதவும்.மேலும் வெயில் காலங்களில் கரும்பு ஜூஸ்,இளநீர்,கூழ்,மோர் போன்ற குளிர் பானங்களை எடுத்து கொள்வது அதிக அளவு பயனை தரும்.முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்க கள்ளமாவு,சந்தன கிழங்கு,இயற்கையாக தயாரிக்கப்பட்ட கஸ்தூரி மஞ்சள்,நலங்கு மாவு,முல்தானி மிட்டி போன்றவற்றை முகத்திற்கு பயன்படுத்தலாம்.

அது இல்லாமல் ஆங்கில மருந்துகள் பயன்படுத்தினால் மருத்துவரின் ஆலோசனைப்படி கையாளுவது சிறப்பு.அதிகாலை எழுவது ,உடற்பயிற்சி மேற்கோளாவது,புத்தகம் படிப்பது,பாடல் கேட்ப்பது,மனதை ஒரு சேர கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள யோகா போன்ற முறையினை கையாளலாம்.இதன் மூலம் பளபளப்பான சருமம் மட்டுமில்லாமல் ஒரு ஆரோக்கியமான வாழ்வை பெறலாம்.

இது போன்ற உபயோகமான தகவல்களை பெற இங்கே கிளிக் செய்யவும்.
 

More News

மக்களவை தேர்தல்: பாஜகவின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலில் 2 திரையுலகினர் பெயர்..!

மக்களவைத் தேர்தல் விரைவில் வர இருக்கும் நிலையில் பாரதிய ஜனதா கட்சி சற்று முன் தனது முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது. இந்த பட்டியலில் இரண்டு திரை உலகினரை சேர்ந்தவர்களின் பெயர்கள்

தவறான தகவல் தருகிறார்.. சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்த அருண் விஜய்..!

தன்னை பற்றியும் தனது குடும்பத்தை பற்றியும் தவறான தகவல் தருகிறார் என பிரபல யூடியூப் சேனல் மீது நடிகர் அருண் விஜய் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

நம்பிக்கை நாயகி நயன்தாராவின் கதை

ஆலியா பட்டின் நெட்பிலிக்ஸ் திரைப்படமான டார்லிங்ஸ், ஆண்களுக்கு எதிரான குடும்ப வன்முறையை ஊக்குவிப்பதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர்.

ஆண்களை அடிக்கிறாரா ஆலியா பட்? ஆலியா பட்-க்கு வலுக்கும் கண்டனம்

ஆலியா பட்டின் நெட்பிலிக்ஸ் திரைப்படமான டார்லிங்ஸ், ஆண்களுக்கு எதிரான குடும்ப வன்முறையை ஊக்குவிப்பதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர்.

நடிப்பில் மட்டுமல்ல படிப்பிலும் கில்லி தான் ; வைரலாகும் சமந்தாவின் மார்க் ஷீட்

தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தாவின் 10, 12 வகுப்பு மார்க் ஷீட் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.