உங்கள் பக்கத்தில் இருப்பவர்களுக்கு கொரோனா இருக்கிறதா??? தெரிந்துகொள்ள இந்த செயலியை பயன்படுத்துங்கள்!!!
- IndiaGlitz, [Friday,April 03 2020]
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் அரசு மக்களுடன் நேரடி கண்காணிப்பில் இருப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இலவச தொலைப்பேசி தொடர்பு முதற்கொண்டு பல நடவடிக்கைகள் பயன்பாட்டில் உள்ள நிலையில் இந்திய அரசு ஒரு புதிய செயலியை அறிமுகப்படுத்தி இருக்கிறது.
இந்த செயலியைப் பயன்படுத்தி பக்கத்தில் இருப்பவர்களுக்கு நோய்த்தொற்று இருக்கிறதா என்பதை எளிமையாக கண்டறியமுடியும். ப்ளூடூத் மற்றும் லொகேஷனை வைத்து நம் பக்கத்தில் நடமாடுபவர்களுக்கு கொரோனா வைரஸ் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள முடியும். மேலும், நோய்த்தொற்று இருப்பவர்களின் விவரங்களையும் உடனடியாக அரசுக்கு இந்த செயலி தெரிவித்து விடும் என்பது கூடுதல் பயன்படாக இருக்கிறது. இந்த புதிய செயலியை Ios பயணாளர்கள் மற்றும் ஆண்ட்ராய்டு செல்போன்களை பயன்படுத்தும் அனைவரும் பதிவிறக்கம் செய்துகொள்ளும்படி உருவாக்கப்பட்டு இருக்கிறது. “உடல்நலத்திற்கான பாலம்” என்ற பொருளுடன் இந்த புதிய செயலிக்கு “ஆரோக்யா சேது” (Aarogya Setu) எனப் பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது.
முன்னதாக தமிழக அரசு கொரோனா நோய்த்தொற்று இருப்பவர்களின் விவரங்களை உடனடியாக பெறுவதற்கு வசதியாக ஒரு புதிய செயலியை அறிமுகப்படுத்தி இருந்தது. கொரோனா அறிகுறி இருப்பவர்கள் GCC Corona Monitoring என்ற பெயர்க்கொண்ட செயலியை ஆண்ட்ராய்ட்டு போன்களில் பதிவிறக்கம் செய்து ஒரு செல்பி எடுத்து அனுப்பினால் போதும், தமிழகச் சுகாதாரத் துறை உங்களது வீடு தேடிவருவார்கள் என அறிவுறுத்தியருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.