வீட்டில் உள்ள செல்லப்பிராணிகள் கொரோனா வைரஸை பரப்புகிறதா???
Send us your feedback to audioarticles@vaarta.com
செல்லப் பிராணிகளான பூனைகள் மற்றும் நாய்களிடம் இருந்து கொரோனா பரவுகிறது என்ற வதந்தியால் சீனாவில் பலர் தங்களது செல்லப் பிராணிகளைத் கைவிட்டு விடுகின்றனர். செல்லப் பூனைகள் மற்றும் நாய்கள் மனிதர்களுக்கு கொரோனா வைரஸை கடத்துவதில்லை. ஆனால் இதுகுறித்து மேலும் ஆய்வுகள் செய்யப்பட வேண்டும் எனத் தற்போது ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
சீனாவின் ஹாங்காங் நகரில் ஜெர்மன் ஷெப்பர்ட் வகையைச் சேர்ந்த ஒரு நாய்க்கு கொரோனா வைரஸ் இருப்பதாகச் சந்தேகிக்கப் பட்டு கடந்த பிப்ரவரி 25 முதல் தனிமைப் படுத்தப்பட்டது. அதற்குப்பின்பு 17 வயதுள்ள பொமரேனியன் வகையைச் சேர்ந்த ஒரு நாயையும் கொரோனா நோய்த்தொற்று இருப்பதாகக்கூறி தனிமைப்படுத்தலுக்கு ஆளாக்கினர் அந்நாட்டு மருத்துவர்கள். மருத்துவப் பரிசோதனையில் இரு நாய்களுக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. நோய்த்தொற்று இருப்பது உறுதியானாதால் தனிமையில் வைக்கப்பட்டு சிகிச்சையும் அளிக்கப்பட்டது.
மேலும், பொமரேனியன் வகை நாயின் எஜமானருக்கும் கொரோனா பாதிப்பு இருந்ததால் மனிதர்களிடம் இருந்து கொரோனா வைரஸ் விலங்குகளுக்கு பரவுகிறதா? என்ற ரீதியில் சந்தேகங்களும் எழுப்பப்பட்டன. ஆனால், இது நிரூபணம் செய்யப்படவில்லை. ஏனெனில் இருநாய்களுக்கும் பரிசோதனையில் கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதிச் செய்யப்பட்டாலும், கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்படும் எந்த பாதிப்புகளும் (நோய்களும்) நாய்களுக்கு ஏற்படவில்லை. இதனை ஹாங்காங்கின் விவசாய, மீன்வளர்ப்பு மற்றும் சுற்றுச்சூல் பாதுகாப்புத் துறை வல்லுநர்கள் உறுதிப்படுத்தினர்.
நோய்த் தாக்குதல்கள் எதுவும் இல்லாததால் 17 வயதான பொமரேனியன் கடந்த வியாழக்கிழமை அன்று தனிமைப்படுத்தலில் இருந்து வெளியே வந்தது. ஆனால் தனிமைப்படுத்தலில் இருந்து வந்த அடுத்த 2 நாட்களில் பொமரேனியன் உயிரிழந்துவிட்டது என்பதும் குறிப்பிடத் தக்கது. பொமரேனியனின் உயிரிழப்புக்கு கொரோனா வைரஸ் காரணமாக இருக்கலாம் எனப் பலரும் சந்தேகித்த நிலையில் உடல் பிரேதப்பரிசோதனை செய்ய மருத்துவர்கள் முன்வந்தனர். ஆனால் அதன் எஜமானர் “நாய்க்கு வயதாகிவிட்டதால் தனிமையில் மன அழுத்தம் ஏற்பட்டு உயிரிழந்து இருக்கலாம். கொரோனா நோய்த்தொற்று காரணமாக இருக்காத” என பிரேதப் பரிசோதனைக்கு அனுமதி மறுத்துவிட்டார்.
தற்போது, ஹாங்காங்கின் விலங்கு நல வாரியமும் பொமரேனியன் நாய்க்கு கொரோனா பரிசோதனையில் நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தாலும், கொரோனா நோய்த்தொற்றுக்கான எந்த பாதிப்புகளையும் அந்த நாயிடம் காணமுடியவில்லை எனத் தெரிவித்து இருக்கிறது. எனவே மனிதர்களிடம் இருந்து கொரோனா வைரஸ் விலங்குகளுக்கோ அல்லது விலங்குகளிடம் இருந்து கொரோனா வைரஸ் மனிதர்களுக்கோ பரவ வாயப்பில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் செல்லப்பிராணிகளிடம் இருந்து கொரோனா தொற்று மற்ற மனிதர்களுக்கோ அல்லது மற்ற விலங்குகளுக்கோ பரவ வாய்ப்பில்லை எனப் பல்வேறு கட்ட ஆய்வுகளுக்குப் பின்பு தெரிய வந்திருக்கிறது. பாரிஸின் விலங்குகள் நல ஆரோக்கியத்துக்கான சர்வதேச அமைப்பும் இந்த முடிவினையே தெரிவித்து இருக்கிறது.
எனவே, செல்லப்பிராணிகளிடம் இருந்து மனிதர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று பரவுவதாக வரும் வதந்திகளை நம்பவேண்டாம் என்று சீன அரசு கேட்டுக்கொண்டுள்ளது. ஆனால் செல்லப் பிராணிகளிடம் காட்டும் நெருக்கத்தைத் தவிர்க்கவேண்டும் எனவும் பாதுகாப்பான சுகாதாரத்தைக் கடைபிடிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டிருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout