குடிநீரில் மூளையைத் திண்ணும் அமீபா!!! கொலை நடுங்க வைக்கும் தகவல்!!!
- IndiaGlitz, [Monday,September 28 2020]
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் விநியோகிக்கப்படும் மாநகரக் குடிநீரில் மூளையை உண்ணும் அமீபா கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இந்த மாதத் தொடக்கத்தில் பொது குழாய் குடிநீரை அருந்திய 6 வயது சிறுவன் அமீபா தாக்கி உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. பொதுவாக நன்னீரில் வாழும் இயல்புடைய நைக்லீரியா ஃபோலெரி எனும் அமீபா அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் தற்போது பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக அம்மாநகராட்சி அதிகரிகள், மக்கள் மத்தியில் கடும் எச்சரிக்கையை விடுத்து வருகின்றனர்.
இதனால் டெக்சாஸ் மாகாணத்தின் 8 மாநகராசி பகுதிகளில் பொதுக் குடிநீரைப் பயன்படுத்தும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் சுத்திகரிக்கப்படாத நீரைப் பயன்படுத்த வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. மாநகராட்சியில் இருந்து விநியோகிக்கப்படும் குழாய் நீரை குடிநீராக அருந்தும்போதோ அல்லது குளிக்கும் போதோ இந்த அமீபா மூக்கு துவாரத்தின் வழியாக மூளைக்குள் சென்று மூளையைத் தின்றுவிடுவாம். எனவே கழிப்பறைக்கு உபயோகிப்பதைத் தவிர வேறு எந்த காரணங்களுக்காகவும் பொதுக் குழாய் நீரைப் பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரிக்கை செய்யப்பட்டு இருக்கிறது.
பொதுவாக இந்த வகை அமீபாவால் நோய்த்தொற்று ஏற்படுவது மிகவும் அரிதானது என்றாலும் தற்போது பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதால் கடும் பதற்றம் ஏற்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. கடந்த 2009-2018 வரை அமெரிக்காவில் இந்நோய்த்தொற்றுக்கு ஆளான 34 பேர் உயிரிழந்து இருப்பதாகவும் புள்ளிவிரவக் கணக்கு ஒன்று தெரிவிக்கிறது. இதனால் மக்கள் கடும் எச்சரிக்கையோடு பொதுக்குழாய் நீரைப் பயன்படுத்த வேண்டும் என்று மாநகராட்சி ஊழியர்கள் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு செய்து வருகின்றனர்.
இந்த அமீபா மனிதர்களைத் தாக்கும்போது கடுமையான கழுத்து வலி, குமட்டல், வாந்தி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருக்கும் எனவும் எச்சரிக்கை செய்யப்படுகிறது. ஏற்கனவே கொரோனா நெருக்கடியில் தவித்து வரும் அமெரிக்கா தற்போது அமீபா வடிவத்தில் புதிய தலைவலியை சந்தித்து வருவதாக ஊடகங்கள் கருத்து வெளியிட்டு உள்ளன.
*UPDATE* Do Not Use Water Advisory LIFTED for most Brazosport Water Authority users
— Texas Commission on Environmental Quality (@TCEQ) September 26, 2020
Lake Jackson residents are still urged to heed DO NOT USE Water Advisory. https://t.co/QEJ0uTNGUi pic.twitter.com/N8f1wVxnfT