விஜய் படங்களை யாரும் பார்க்க வேண்டாம்: பிரபல சாமியாரின் பேச்சால் பரபரப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்துக்களை அவமதிக்கும் வசனங்களை திரைப்படங்களில் பேசி வரும் விஜய் படங்களை பார்க்க வேண்டாம் என்று மதுரை ஆதினம் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை பழங்காநத்தம் பகுதியில் விசுவ ஹிந்து பரிஷத் துறவியர் மாநாடு நடைபெற்ற நிலையில் இந்த மாநாட்டில் மதுரை ஆதினம் ஆவேசமாக பேசினார். அவரது பேச்சில் தமிழகத்தில் தற்போது கோவில்களின் நிலை, அறநிலையத் துறையின் செயல்பாடு, திராவிட மாடல் ஆகியவை குறித்து கடுமையாக விமர்சனம் செய்தார்.
இதனையடுத்து அவர், ‘இந்துக்களை அவமதிக்கும் வகையிலான வசனங்களை திரைப்படங்களில் பேசி வரும் நடிகர் விஜய் திரைப்படங்களை பார்க்காதீர்கள் என்றும் அவர் தெரிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கு விஜய் ரசிகர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். விஜய் தனது திரைப்படங்களில் எந்த மதத்தையும் இழிவுபடுத்தி வசனம் பேசியது இல்லை என்றும் அவர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். இருப்பினும் மதுரை ஆதினத்தின் இந்த பேச்சுக்கு விஜய் தரப்பிலிருந்து என்ன பதில் அதிகாரபூர்வமாக வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com