சிரிப்பதற்கு தடை விதித்த சர்வாதிகார நாடு… காரணம் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
சர்வாதிகாரத்திற்குப் பெயர்போன வடகொரியாவில் உள்ள மக்கள் இன்று முதல் வரும் 10 நாட்களுக்கு யாரும் சிரிக்கக்கூடாது என தடைவிதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த விதிமுறை தற்போது சர்வதேச அளவில் பேசுபொருளாகி இருக்கிறது.
வடகொரியாவின் முன்னாள் அதிபர் கிம் ஜான் இல் கடந்த 2011 டிசம்பர் 17 ஆம் தேதி உயிரிழந்தார். அவரது இறப்பை அனுசரிக்கும் விதமாக தற்போதைய அதிபர் கிம் ஜான் உன் நாட்டு மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறார். அதில் ஒன்று அடுத்து வரும் 10 நாட்கள் பொதுமக்கள் அனைவரும் துக்கம் அனுசரிக்க வேண்டும். யாரும் சிரிக்கக்கூடாது. பொருட்களை வாங்குவதற்கு கூட வெளியே சென்றுவரக் கூடாது. மேலும் மது, புகைப்பிடிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
வடகொரியாவில் இதற்கு முன்பு முன்னாள் அதிபரின் இறப்புக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. ஆனால் சிரிக்கக்கூடாது எனும் புதிய விதிமுறை தற்போது சர்வதேசத் தளத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுபோன்ற துக்க தினத்தை அனுசரிப்பதற்காகவே மக்கள் அடிக்கடி அழுது பழக வேண்டும் என்ற விதியும் இருந்து வருகிறது.
சமீபத்தில் வடகொரியாவில் தென்கொரியா பாப் பாடல் வீடியோக்களை பார்த்த கல்லூரி மாணவர்கள் 7 பேருக்கு அதிபர் கிம் தூக்குத்தண்டனை விதித்ததாக மனித உரிமை அமைப்பு ஒன்று தகவல் வெளியிட்டு இருந்தது. சர்வதேச அளவில் இந்தத் தகவல் கடும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் தற்போது நாட்டு மக்கள் யாரும் சிரிக்கக்கூடாது எனக் கூறியிருப்பது மேலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com