ஷிவாங்கி வேற லெவல், அவரோடு என்னை கம்பேர் பண்ண வேண்டாம்: சீரியல் நடிகை
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் நடிகை ஒருவரை ஷிவாங்கியுடன் ஒப்பிட்டு மீம் ஒன்று வெளியாகி வைரல் ஆனதை எடுத்து ’தயவு செய்து என்னை ஷிவாங்கியுடன் ஒப்பிட வேண்டாம், அவர் வேற லெவல், அவருக்கு நானே ரசிகை’ என்று அந்த நடிகை விளக்கம் கொடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ’பாக்கியலட்சுமி’. இந்த சீரியலில் இனியா என்ற கேரக்டரில் நடித்து வருபவர் நேஹா மேனன். இந்த சீரியலில் இவர் பள்ளி மாணவியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சமீபத்தில் நேஹாவையும் ஷிவாங்கியையும் ஒப்பிட்டு ஒரு மீம் இணையதளங்களில் வைரலானது. இதனை அடுத்து ஷிவாங்கி ரசிகர்கள் ’அவரோடு உங்களை எல்லாம் ஒப்பிட முடியாது’ என கமெண்ட்ஸ் அளித்து வருகின்றனர். இது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள நேஹா மேனன் கூறியதாவது: சமீபத்தில் ஷிவாங்கியுடன் என்னை ஒப்பிட்டு ஒரு மீம் ஒன்று வெளியானது. அந்த மீமை நானும் மிகவும் ரசித்தேன். அந்த மீமில் என்னையும் ஷிவாங்கியையும் கம்பேர் செய்யவே இல்லை. ஆனால் சிலர் ஷிவாங்கியுடன் உங்களை நீங்கள் கம்பேர் பண்ணி கொள்ளாதீர்கள்’ என்று கூறி வருகின்றனர். நானும் அதையே தான் சொல்கிறேன், ஷிவாங்கியுடன் என்னை யாரும் கம்பேர் பண்ண வேண்டாம், அவர் வேற லெவல் திறமையானவர். நானே அவருக்கு ஒரு மிகப்பெரிய ரசிகை. எனவே என்னையும் அவரையும் தயவுசெய்து கம்பேர் பண்ண வேண்டாம்’ என்று கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
"Don't compare me with Sivaangi" - Neha Menon of "Bakkiyalakshmi" fame pic.twitter.com/LA1dVNnf9n
— Anbu (@Mysteri13472103) April 9, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments