ஊரடங்கு நேரத்தில் வங்கிகள் இயங்குமா?
- IndiaGlitz, [Monday,May 24 2021]
தமிழகத்தில் வரும் மே 31 ஆம் தேதி வரை தளர்வுகளற்ற ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கு நேரத்தில் மளிகை, காய்கறி போன்ற அத்யாவசியச் சேவைகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. இதனால் வங்கிச் சேவைகள் தொடருமா எனக் கேள்வி பல தரப்புகளில் எழுப்பப்பட்டு இருந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் தளர்வுகளற்ற ஊரடங்கு நேரத்திலும் காலை 10-2 மணி வரை வங்கி சேவை தொடரும் என தமிழ்நாடு வங்கியாளர்கள் குழுமம் அறிவித்து உள்ளது. இதனால் வரும் 31 ஆம் தேதி வரை வங்கி கிளைகளில் காலை 10- மதியம் 2 மணிவரை வர்த்தகம் நடத்தப்படும். ஆனால் இந்த நேரத்தில் பணம் எடுத்தல், பணம் செலத்துதல், என்.இ.எப்,டி, ஆர்.டிஜில்.எஸ் போன்ற முக்கிய சேவைகள் மட்டுமே வாடிக்கையாளர்களுக்குச் செய்து கொடுக்கப்படும் என வங்கியாளர்கள் குழுமம் அறிவித்து உள்ளது.
மேலும் இந்தக் காலக்கட்டத்தில் வங்கிப் பணியாளர்கள் 10-4 மணி வரை பணியாற்றுவார்கள் என்றும் சுழற்சி முறையில் 3 இல் ஒரு பங்கு பணியாளர்கள் மட்டுமே வங்கிக்கு வருவார்கள் என்றும் கூறப்பட்டு உள்ளது. அதோடு கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் கடுமையாகக் கடைப்பிடக்கப்படும் என்றும் வங்கியாளர்கள் குழுமம் குறிப்பிட்டு இருக்கிறது.