close
Choose your channels

கமல்ஹாசன், ஏ.ஆர்.ரஹ்மான் கலந்து கலந்துகொள்ளும் DMY கிரியேஷன் நிறுவனர் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி..!

Wednesday, October 2, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திரையுலக முன்னணி பிரபலங்கள் கமல்ஹாசன், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோர் கலந்து கொள்ளும், DMY கிரியேஷன் நிறுவனர் மகனின் பிரமாண்ட திருமண வரவேற்பு நிகழ்ச்சி !!

மலேசியா இதுவரை காணாத அளவில், பிரம்மாண்டமான நட்சத்திர திருமண விழா நடைபெற உள்ளது. இரண்டு நாடுகளை ஒன்றாக இணைக்க உள்ள இவ்விழாவில், மலேசிய என்டர்டெயின்மென்ட் உலக பிரபலங்களும், தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களும் பங்கேற்கவுள்ளனர்.

அக்டோபர் 12 அன்று, DMY கிரியேஷன் நிறுவனர் மற்றும் (மேலும் DMY என அறியப்படும்), தலைவர் டத்தோ முஹம்மது யூசாஃப், தனது மகன் ஃபஜ்ருல் ரஹ்மானுக்கு, செட்டியா நகரில் அமைந்துள்ள கன்வென்சன் சென்டரில், பிரமாண்டமான திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்துகிறார். தம்பதிகளின் திருமணத்தைக் குறிக்கும் நிக்கா விழா, அங்கு அரங்கேறுகிறது. நண்பர்கள், விருந்தினர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் இரு காதல் மனங்களின் ஒருங்கிணைவு கொண்டாடப்படவுள்ளது.

இந்த பிரம்மாண்டமான கொண்டாட்டத்தில் பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களும், கோலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களும் இணைந்து கலந்து கொண்டு விழாவைச் சிறப்பிக்கவுள்ளனர். மினுமினுக்கும் நட்சத்திரங்களுக்கு மத்தியில் இவ்விழா பெரும் கவர்ச்சியுடன் கலாச்சார அடையாளமாகவும் நிகழவுள்ளது.

பழம்பெரும் ஆளுமைமிக்க நடிகர்கள் உட்பட, கோலிவுட் சூப்பர் ஸ்டார்கள் என கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ள இந்நிகழ்வில், உலகநாயகன் கமல்ஹாசன், ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அவரது திறமையான மகன் ஏ.ஆர்.அமீன், அதே போல் தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நட்சத்திரமான சிவகார்த்திகேயன், பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் மற்றும் நடிகர் சூரி ஆகியோர் இணையவுள்ளார்கள். இவர்களுடன் உள்ளூர் மலேசியப் பிரபலங்களும், அரசியல்வாதிகளும் இந்த கொண்டாட்ட நிகழ்வில் பங்கேற்கின்றனர்.

உலகின் தலைசிறந்த வடிவமைப்பாளர்கள் இந்தியாவின் மிகவும் பிரபலமான பேஷன் மேஸ்ட்ரோக்கள் - மனீஷ் மல்ஹோத்ரா மற்றும் சப்யாசாச்சி வடிவமைத்த புதுவிதமான ஆடை அணிகலன்களை, மணமகனும், மணமகளும் அணிய இருக்கிறார்கள்.

“இந்தத் திருமணம் இரு நபர்களுக்கு இடையேயான அன்பின் கொண்டாட்டம் மட்டுமல்ல, ஒன்று கூடும் இரண்டு துடிப்பான கலாச்சாரங்கள், வேற்றுமையில் ஒற்றுமையின் அழகை வெளிப்படுத்துகின்றன.


"இந்த சிறப்புத் தருணத்தை உலகம் முழுவதும் உள்ள நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். மலேசியப் பொழுதுபோக்கு திரை பிரபலங்கள் மற்றும் தமிழ்நாட்டு சினிமா பிரபலங்கள் ஒரு மறக்க முடியாத அனுபவத்தை அடைவதைக் காண ஆவலாக இருக்கிறேன் என்று முகமது யூசாஃப் கூறினார்.

DMY ஈவன்ட்ஸ் குரூப் மிக உயர்ந்த தரத்தில் உலகம் வியக்கும் வகையிலான பிரமாண்ட திருமண வரவேற்பை உருவாக்கவுள்ளது.
இந்த கலாச்சார நிகழ்வு பாலிவுட் மற்றும் கோலிவுட்டின் அடையாளங்களை ஒருங்கிணைக்கும் அதே வேளையில், செழுமையான பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் நிகழ்வாக இருக்கும்.

முன்னணி நட்சத்திரங்களான விஜய், கார்த்தி போன்றோருடன் பணிபுரிந்த பிரபல சமையல்காரர் மாதம்பட்டி ரங்கராஜ், தலைமையில் விருந்தினர்களுக்கு 77 உணவுகள் கொண்ட விருந்து அளிக்கப்படும், பாரம்பரிய தானியங்கள் மற்றும் தினை, என ஒரு தனித்துவமான மற்றும் மறக்க முடியாத சமையல் அனுபவத்தை இந்த விருந்து உங்களுக்குத் தர இருக்கிறது.

உணவை ருசித்து ரிவ்யூ தரும் இர்ஃபான் வியூ சேனலின் பிரபலமான யூடியூபர் முகமது இர்ஃபான், இந்நிகழ்வில் கலந்துகொண்டு, விருந்தின் சுவைகளை எடுத்துரைத்து, இந்த இரவை இனிமையாக்க இருக்கிறார்கள்.

இவருடன் இணையும் பிரபல ஆர்.ஜே. பிராவோ, வாழ்க்கை முறை மற்றும் பயண வீடியோக்களுக்காக கொண்டாடப்பட்ட டிஜிட்டல் கிரியேட்டர் சிந்துஜா ஹரி, மற்றும் சமூக வலைதள பிரபலமான சஞ்சனா ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொள்கிறார்கள்.

ஷியாமக் தாவர் போன்ற மற்றும் பிரபு தேவா, ஜாம்பவான்களால் பாராட்டப்பட்ட சென்னையைச் சேர்ந்த புகழ்பெற்ற நடன அமைப்பாளர் ஜான் பிரிட்டோவின் குழு இவ்விழாவை நடனங்களால் சிறப்பிக்கவுள்ளது.

புகழ்பெற்ற வயலின் கலைஞர் மனோஜ் குமாரும் தனது மயக்கும் நிகழ்ச்சிகளால் மேடையை அலங்கரிக்க உள்ளார். பாரம்பரிய மற்றும் சமகால பாணிகளை கலக்கும் அவரது திறன் ஒரு மாயாஜால சூழலை உருவாக்கும், விருந்தினர்கள் உண்மையிலேயே மறக்க முடியாத இன்னிசை அனுபவத்தைப் பெறுவார்கள்.

மதிப்பிற்குரிய ஊடக அதிபரும் சன் பிக்சர்ஸ் தலைவருமான கலாநிதி மாறன், ஆந்திராவின் ஏபி இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் சஞ்சய், வி கிரியேஷன்ஸின் கலைப்புலி எஸ். தாணு, ஏ&பி குரூப்ஸின் அருண் பாண்டியன், வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸின் சுரேஷ் காமாட்சி மற்றும் ஐங்கரன் கருணா உட்பட, கோலிவுட் திரையுலகைச் சேர்ந்த பிரபல திரைப்பட தயாரிப்பாளர்களும் இந்நிகழ்வில் கலந்து கொள்கின்றனர்.

இவர்கள் அனைவரின் பங்கேற்பு பண்டிகை சூழ்நிலையை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், கோலிவுட் திரைப்பட தயாரிப்பாளர்களிடையே நட்புறவையும், ஒற்றுமையையும் வெளிப்படுத்துகிறது. இது இந்த திருமணத்தை ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாக மாற்றுகிறது.

இந்த திருமணமானது இரு தனிமனிதர்களின் சங்கமத்தைக் கொண்டாடுவது மட்டுமின்றி, காதல், ஒற்றுமை மற்றும் பாரம்பரியத்தின் கலாச்சார பின்னணிகள் என வித்தியாசமான நிகழ்வாக அரங்கேறவுள்ளது, விருந்தினர் பட்டியல், பிரமிக்க வைக்கும் அலங்காரம், மற்றும் அசத்தலான சமையல் என, இந்த நிகழ்வு மிகவும் சிறப்புமிக்க நிகழ்வாக நடைபெறவுள்ளது. இந்த ஆண்டின் மிகப்பெரிய நிகழ்வாக இந்நிகழ்வு இருக்கும்.

இத்திருமண விழாவில் பங்கேற்பாளர்களுடன் முக்கியமாக இடம்பெறும் பிரபலங்கள், இந்த பிரமாண்டமான கொண்டாட்டத்தின் மகிழ்ச்சியான தருணங்களை, தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள, சமூக ஊடகங்களில், #DMYVEETUKALYANAM என்ற அதிகாரப்பூர்வ ஹேஷ்டேக்கைப் பயன்படுத்த ஊக்குவிக்கப்பட்டுள்ளது.

திரு டத்தோ முஹம்மது யூசாஃப் நிறுவிய DMY கிரியேஷன், பொழுதுபோக்கு மற்றும் திரைப்பட விநியோகத் துறையில், மலேசியாவில் முக்கிய பங்கு வகிக்கிறது. முக்கியமாக தமிழ் மற்றும் பாலிவுட் படங்களைக் கொண்டு வருவதில் பெயர் பெற்றவர். ராயன், தங்கலான், மற்றும் சலார் போன்ற படங்களை மலேசியப் பார்வையாளர்களுக்கு இந்நிறுவனம் தந்துள்ளது.

DMY கிரியேஷன் தொடர்ந்து கலாச்சாரங்களை இணைப்பதில் கவனம் செலுத்துகிறது, மலேசியாவின் வளமான பன்முக கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் உள்ளடக்கத்துடன், இந்திய கலாச்சாரத்தை ஒருங்கிணைக்கும் கருவியாகச் செயல்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment