தலைமை செயலகத்தில் தர்ணா: மு.க.ஸ்டாலின் கைது

  • IndiaGlitz, [Thursday,May 24 2018]

தூத்துகுடியில் கடந்த மூன்று நாட்களாக இயல்பு நிலை பாதிக்கப்பட்டு அந்த பகுதி மக்கள் பெரும் துயரத்தில் உள்ள நிலையில் அங்கு அமைதியை ஏற்படுத்த முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்த இன்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமைச்செயலகம் சென்றார். ஆனால் அவருக்கு முதல்வரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது. மக்கள் பிரச்சனை குறித்து பேச முதல்வரை சந்திக்க வந்த தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் முதல்வர் அறைமுன்பு தர்ணா போராட்டத்தில் ஸ்டாலின் ஈடுபட்டார்.

இதனையடுத்து ஸ்டாலினை காவல்துறை அதிகாரிகள் குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனர். அவருடன் திமுக முன்னாள் அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும் கைது செய்யப்பட்டனர். ஸ்டாலின் கைதுக்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தும் போலீசார் அதனை கண்டுகொள்ளவில்லை. மேலும் ஸ்டாலினை கைது செய்து கொண்டு சென்ற வேனை திமுக மறித்து முற்றுகையிட்டதால் தலைமைச்செயலகம் பகுதியே போர்க்களம் போல் காட்சியளித்தது.

முன்னதாக ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தபோது, 'முதலமைச்சர் பழனிசாமி பதவி விலகும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்றும், என்னை துப்பாக்கியால் சுட்டால் கூட குண்டுகளை நெஞ்சில் தாங்க தயார் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார்.