அண்ணன் திமுக, தம்பி அதிமுக...! களைகட்டும் ஆண்டிப்பட்டி தொகுதி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தொகுதியில் அதிமுக சார்பாக லோகிராஜனும், திமுக சார்பாக மகராஜனும் போட்டியிடுகிறார்கள். இதில் சிறப்பு என்னவென்றால் இவர்கள் இருவரும் உடன்பிறந்த சகோதரர்கள் ஆவர்.
இத்தொகுதியில் ஏற்கனவே கடந்த 2019-ஆம் ஆண்டு இடைத்தேர்தல் நடந்த நிலையில், அண்ணன், தம்பி இருவரும் எதிரெதிராக நின்று போட்டியிட்டனர். ஆனால் தம்பி அதிமுக லோகிராஜனை, அண்ணன் திமுக மகாராஜன் சுமார் இரண்டாயிரத்து முந்நூற்று இருபத்தி மூன்று வாக்குகள்(2323) வித்தியாசத்தில் தோற்கடித்து, வெற்றி கண்டார்.
ஆண்டிப்பட்டிக்கு ஏன் இவ்வளவு மவுசு...?
தேனி மாவட்டத்திலுள்ள ஆண்டிப்பட்டி தொகுதி, எப்போதும் ஸ்டார் அந்தஸ்து பெற்ற தொகுதி என்றே சொல்லலாம். இதற்கு காரணம் மேலும் ஒரு சுவாரசியமும் உள்ளது. தமிழகத்தில் ஆட்சி புரிந்த முன்னாள் முதல்வர்களான எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா வாகை சூடி அரியணையில் அமர்ந்த தொகுதி ஆண்டிப்பட்டிதான்.
தேர்தல் களத்தில் அண்ணன், தம்பி:
இரண்டாவது முறையாக அரசியல் களத்தில் எதிரெதிராக சந்திப்பது அண்ணன், தம்பி என்பதால் அத்தொகுதியில் தேர்தல் விழா களை கட்டியுள்ளது. மக்கள் மத்தியில் யார் ஜெயிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் ஆண்டிப்பட்டி அதிமுக-வின் கோட்டை என சொல்லலாம். சென்ற 2001 முதல் 2016 வரை அதிமுக அங்கு வெற்றிகண்டது. 2016-லும் அதிமுக சார்பாக நின்ற தங்கத்தமிழ்செல்வன் வெற்றிகண்டார். பின் அவர் அமமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு தாவியதால், சென்ற 2019-இல் இடைத்தேர்தல் நடைபெற நேர்ந்தது. இதில் உடன்பிறந்த சகோதரர்கள் இருவரும் போட்டியிட்டதால், இத்தொகுதி மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்தது.
எனவே ஆண்டிப்பட்டியில் ஜெயிப்பதற்காக மகாராஜனும், லோகிராஜனும் கடுமையாக உழைத்து வருகிறார்கள். கொரோனா காலத்தில் உதவி, மேலும் பல்வேறு வளர்ச்சித்திட்டங்களையும் மக்களுக்காக மகாராஜன் செய்து வருகிறார். லோகிராஜனும் பல களப்பணி மற்றும் உதவிகளை செய்து வருகின்றார்.
அண்ணன், தம்பி இருவருமே விருப்பமனு அளித்திருந்த நிலையில், இருவருக்கும் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனால் ஆண்டிப்பட்டி தொகுதி பரபரப்பு நிறைந்துள்ளது என்றே சொல்லலாம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments