இது "வெறும் ட்ரைலர் தான், மெயின் பிக்சர் இனிதான்"....! அதிரடி காட்டிய ஸ்டாலின்...!
Send us your feedback to audioarticles@vaarta.com
சட்டப்பேரவையில் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், "ஆளுநரின் உரை வெறும் ட்ரைலர் தான் முழு நீளப்படத்தை இனிமேல் தான் பார்ப்பீர்கள்" என்று கூறியுள்ளார்.
ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் பேசிய உரைக்கு, நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கான விவாதத்திற்கு, தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் பதில் கூறியிருப்பதாவது, "நீதிக்கட்சி துவங்கி 100 ஆண்டுகள் கடந்த நிலையில், தற்போது திமுக ஆட்சிக்கு வந்தது பெருமையளிக்கிறது. நீதிக்கட்சியின் தொடர்ச்சியாக இருந்தவர் அண்ணா, அண்ணா வழியாக வந்தவர் கருணாநிதி, கருணாநிதியின் தொடர்ச்சி நான்" என்றும், அண்ணா அவர்களின் அரசியல் வாரிசாகவும், கருணாநிதியின் அவர்களின் கொள்கை வாரிசாகவும் நான் இருப்பேன்" என்றும் கூறினார்.
தமிழகத்தில் ஐந்தாண்டு ஆட்சி செய்யக்கூடிய திமுக அரசின் கொள்கை மற்றும் நலத்திட்டங்களை, ஆளுநர் உரையில் சுருக்கி சொல்ல இயலாது. ஆளுநரின் உரை "வெறும் ட்ரைலர் தான், முழு நீளப்படத்தை இனிமேல் தான் அரசு காட்டும்" என்று முக.ஸ்டாலின் குறிப்பிட்டார்.
திமுக 10 ஆண்டுகளுக்கு பின் ஆட்சியை பிடித்துள்ளது, இதனால் கூறிய வாக்குறுதிகளை கட்டாயமாக நிறைவேற்றுவோம், இது குறித்த எந்த சந்தேகமும் வேண்டாம். திமுக ஆட்சிக்கு வந்த முதல் நாளிலிருந்து, படிப்படியாக தேர்தல் சமயத்தின் போது கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம். மக்கள் பலரும் திமுக-விற்கு வாக்களிக்காதது குறித்து வருத்தம் தெரிவிக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments