திமுக ஹனிமூனில் இருக்கிறார்கள்… நடிகை குஷ்புவின் கூற்றுக்கு என்ன அர்த்தம்?
Send us your feedback to audioarticles@vaarta.com
திமுக ஆட்சி தற்போது தேனிலவு காலத்தில் இருப்பதால் அவர்களைப் பற்றி ஆறு மாதங்கள் கழித்து கருத்துச் சொல்கிறேன் என்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும் நடிகையுமான குஷ்பு நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தைக் கொண்டாடும் வகையில் சென்னை அப்பல்லோ மருத்துவமனை சார்பாக, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பிரச்சாரத் திட்டம் துவங்கும் நிகழ்ச்சி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக நடிகை குஷ்பு அழைக்கப்பட்டு இருந்தார். மேலும் மார்பக புற்றுநோய் சிகிச்சை குறித்த விவரங்கள் அடங்கிய (Apollocancentres.com) எனும் புதிய சமூகு வலைத்தளத்தையும் அவர் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சி முடிந்தவுடன் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “மார்பக புற்றுநோய் குறித்து அலட்சியம் காட்ட வேண்டாம். ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் எளிதாக குணப்படுத்தலாம். மார்பகப் புற்றுநோய் தொடர்பாக பரிசோதனை செய்து கொள்ளுமாறு வீட்டிலிருக்கும் ஆண்கள் அறிவுறுத்த வேண்டும்“ என கேட்டுக்கொண்டார்.
மேலும் எந்த பதவி, பொறுப்பையும் எதிர்பார்தது பாஜகவில் இணையவில்லை. ஆனால் தற்போது பாஜக தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளராக என்னை நியமித்துள்ள பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் திமுக ஆட்சி தற்போது தேனிலவு காலத்தில் உள்ளது. ஆறு மாதத்திற்கு பிறகு ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து கருத்துக் கூறுகிறேன். பாஜக, காங்கிரஸ் என அனைத்துக் கட்சியினரும் கொரோனா வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிகை குஷ்பு சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து “அண்ணாத்த“ திரைப்படத்தின் முக்கியக் காட்சிகளில் நடித்துள்ளார். இந்தப் படத்தை குஷ்புவின் ரசிகர்கள் ஆவலோடு எதிர்ப்பார்த்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout