மார்ச் 6ஆம் தேதி வெளியாகும் படத்தை பார்த்த திமுக தலைவர்!

ஜீவா நடிப்பில் பிரபல இயக்குநரும் எழுத்தாளருமான ராஜுமுருகன் இயக்கத்தில் உருவாகிய திரைப்படம் ஜிப்ஸி. மார்ச் 6ம் தேதி வெளியாக உள்ள இந்தப் படம் சென்சாரில் சிக்கி, அதன் பின்னர் டிரிபியூனல் சென்று ‘ஏ’சான்றிதழ் பெற்றது. தற்போது பெரும் போராட்டத்திற்கு பின்னர் இந்த படம் ரிலீசாக உள்ள நிலையில் இந்த படத்தை இன்று திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களுக்காக சிறப்பு காட்சி திரையிடப்பட்டது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் பிரிவியூ திரையரங்கம் ஒன்றில் இந்த படத்தின் சிறப்புக்காட்சி திரையிடப்பட்டது. திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களுடன் முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், திண்டுக்கல் பெரியசாமி, எ.வ.வேலு போன்றவர்கள் இந்த படத்தை பார்த்தனர்.

முன்னதாக முக ஸ்டாலின் அவர்கள் தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கிய அசுரன் திரைப்படத்தை தூத்துக்குடியில் பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த படத்தை பார்த்து அவர் பாராட்டி தனது டுவிட்டரில் பதிவு செய்தது போல ஜிப்சி திரைப்படம் குறித்தும் அவர் பதிவு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.