தமிழக முதல்வருடன் முக ஸ்டாலின் திடீர் சந்திப்பு!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை இன்று திமுக தலைவர் முக ஸ்டாலின் சந்தித்தார்.

சமீபத்தில் முதல்வர் பழனிசாமி அவர்களின் தாயார் மறைந்ததை அடுத்து திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் முதல்வரின் தாயாரின் மறைவுக்கு நேரில் ஆறுதல் தெரிவிப்பதற்காக திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் சற்றுமுன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்தார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வரின் வீட்டில் வைக்கப்பட்டிருந்த முதல்வர் தாயார் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். இந்த சந்திப்பின்போது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மற்றும் அமைச்சர்கள் சிலர் உடனிருந்தனர்.

சமீபத்தில் சைதாப்பேட்டை திமுக எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியன் மகன் கொரோனாவால் பலியானபோது முதல்வர், துணை முதல்வர் உள்பட அதிமுகவினர் இரங்கல் தெரிவித்ததும், முதல்வரின் தாயார் மறைவிற்கு திமுக தலைவர் நேரில் வந்து ஆறுதல் கூறியதும் தமிழகத்தின் அரசியல் நாகரீகத்தை எடுத்து காட்டும் நிகழ்வுகளாக பார்க்கப்படுகிறது

More News

நாட்டை விட்டே வெளியேறி விடுவேன்… எதிர்க்கட்சியினரை நோக்கி சாவல் விடும் அதிபர் ட்ரம்ப்!!!

வருகிற நவம்பர் 3 ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது. இத்தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுகிறார். அதற்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது,

ஐபிஎல் திருவிழா கள நிலவரம்: சென்னை – ராஜஸ்தான்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 37 ஆவது லீக் போட்டியில் மிகவும் இக்கட்டான நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. 

'நம்ம வீட்டு பிள்ளை' நாயகிக்கு கிடைத்த மெகா பட்ஜெட் பட வாய்ப்பு!

நடிகர்கள் சித்தார்த் மற்றும் சர்வானந்த் இணைந்து நடிக்கும் திரைப்படத்தின் தகவலை சமீபத்தில் பார்த்தோம். மெகா பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தில் ஒரு நாயகியாக அதிதி ராவ் ஹைத்ரி நடிக்க ஒப்பந்தம் ஆனார்

நீட் தேர்வில் சாதனை: சத்தியத்தை நிறைவேற்றிய சபரிமாலா 

நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லை என்ற மன உளைச்சலில் அரியலூர் அனிதா கடந்த 2017ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இன்றைய நாமினேஷனில் சிக்கிய எதிர்பாராத இருவர் யார் யார்?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அந்த வாரம் வெளியேறும் போட்டியாளர்களை முடிவு செய்ய நாமினேசன் செய்யப்படுவது வழக்கம்