ஒரு ஆண்டுக்கு பின்னர் முரசொலி அலுவலகம் வந்தார் கருணாநிதி

  • IndiaGlitz, [Thursday,October 19 2017]

திமுக தலைவர் கருணாநிதி கடந்த சில மாதங்களாக முதுமை காரணமாக வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். சமீபத்தில் நடந்த முரசொலி பவள விழாவிற்கு கூட அவர் வரவில்லை. முரசொலி பவள விழாவை அடுத்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சி ஒன்று முரசொலி அலுவலகத்தில் கருணாநிதி பார்வையிடுவதற்காக வைக்கப்பட்டிருந்தது

இந்த நிலையில் சற்று முன்னர் கருணாநிதி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்திற்கு வந்து கண்காட்சியை பார்வையிட்டார். ஒரு ஆண்டுக்கு பின்னர் அவர் முரசொலி அலுவலகம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த கண்காட்சியில் கருணாநிதியின் மெழுகுச்சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை இன்னும் சற்றுநேரத்தில் அவர் பார்வையிட உள்ளார். இதுவரை கருணாநிதியின் மெழுகுச்சிலையுடன் பல திமுக தலைவர்கள் புகைப்படம் எடுத்து கொண்டிருந்த நிலையில் தற்போது முதன்முதலாக அவரே புகைப்படம் எடுக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கமல் அரசியலுக்கு வந்தால் ஆதரவு: நடிகை ஓவியா

பிக்பாஸ் புகழ் ஓவியா இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவதை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளார். 

சிலுக்குவார்ப்பட்டி சிங்கம் படப்பிடிப்பில் ஓவியா! வைரலாகும் ஸ்டில்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் உலக தமிழர்களின் மனதில் குடிபுகுந்த நடிகை ஓவியா, அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர் 'காஞ்சனா 3' மற்றும் 'சிலுக்குவார்ப்பட்டி சிங்கம்'

தமிழிசையின் 'மெர்சல்' ஜிஎஸ்டி கருத்துக்கு திருமாவளவன் பதில்

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' படத்தின் கடைசி காட்சியில் இடம்பெற்ற ஜிஎஸ்டி வசனம் மற்றும் டிஜிட்டல் இந்தியா குறித்த வசனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன்,

கபாலியை முந்திய 'மெர்சல்' முதல் நாள் வசூல்

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் நேற்று வெளியாகி பெருவாரியான பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று நல்ல வசூலை அள்ளியது

நிலவேம்பு கசாயம் சர்ச்சை: கமல்ஹாசனுக்கு சித்த மருத்துவர்கள் சங்கம் கண்டனம்

கமல்ஹாசன் தனது டுவிட்டரில் பதிவு செய்யும் கருத்துக்களுக்கு பொதுமக்களின் அமோக ஆதரவை பெற்ற நிலையில் முதன்முதலாக அவருடைய டுவீட் ஒன்றுக்கு பொதுமக்கள் தரப்பில் இருந்தும் கண்டனங்கள் குவிந்து வருகிறது.