நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்த வழக்கு. திமுகவுக்கு ஏமாற்றம்
- IndiaGlitz, [Wednesday,February 22 2017]
கடந்த 18ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தனது அரசுக்கு நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முன்மொழிந்தார். இந்த வாக்கெடுப்பின்போது எதிர்க்கட்சிகள் அமளி செய்ததால் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட திமுக உறுப்பினர்கள் அனைவரும் குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றப்பட்டனர்.
இந்நிலையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றிவிட்டு நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என்று கோரி சென்னை ஐகோர்ட்டில் திமுகவின் சார்பில் மு.க.ஸ்டாலின் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று விசாரிப்பதாக நீதிமன்றம் அறிவித்தது.
இந்நிலையில் சற்று முன்னர் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி இந்த மனுவை பிப்ரவரி 27ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக அறிவித்தார். இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வரும் என்று நம்பிக்கையுடன் காத்திருந்த திமுகவுக்கு இது ஏமாற்றத்தை அளித்ததாக திமுக வட்டாரங்கள் கூறுகின்றன. இருப்பினும் வரும் 27ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது தமிழக மக்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.