உதயநிதியின் 'கெத்தை' கண்டுபிடித்த அமைச்சருக்கு வாழ்த்து கூறிய திமுக பிரபலம்!
- IndiaGlitz, [Saturday,September 21 2019]
தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘கெத்து’, வச்சு செய்வேன் என்னும் சொற்கள் சிலப்பதிகாரத்தில் இருப்பதாகவும், இன்றைய இளைஞர்கள் தெரிந்தோ, தெரியாமலோ அதனை தற்போது பயன்படுத்துகிறார்கள் என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு உதயநிதி நடித்த ‘கெத்து’ திரைப்படத்திற்கு வரி விலக்கு கிடையாது என தமிழக அரசு அறிவித்தது. இதற்கு காரணமாக கெத்து’ படத்தின் டைட்டில் தமிழ்ச்சொல் இல்லை என தமிழக அரசு அறிவித்தது.
இதுகுறித்து கருத்து கூறிய திமுக எம்பி வில்சன், 2016ல் உதயநிதியின் ‘கெத்து' படத்தின் பெயர் தமிழ் சொல் இல்லை எனக்கூறிய அதிமுக அரசு, தற்போது ‘கெத்து’ தமிழ் வார்த்தை என தெரிவித்துள்ளது. கெத்து தமிழ் வார்த்தைதான் என்று மூன்று ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடித்ததற்கு வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.