கவச உடை அணிந்து ஜனநாயக கடமையை ஆற்றிய கனிமொழி!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்றது என்பதும் இந்த தேர்தலில் திரையுலக பிரபலங்கள், அரசியல்வாதிகள் பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் மாலை 6 மணி முதல் 7 மணி வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க வசதி செய்யப்பட்டு இருந்தது என்பதும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க வேண்டும் என முன்கூட்டியே அறிவித்து இருந்தால் அவர்களுக்கு கவச உடை ஏற்பாடு செய்யப்படும் என்றும் அதே போல் அவர்கள் வாக்களிக்க இருக்கும் வாக்குச் சாவடியில் உள்ள தேர்தல் அதிகாரிகள் அனைவருக்கும் கவச உடைகள் ஏற்பாடு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது
இந்த நிலையில் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட திமுக எம்பி கனிமொழி அவர்கள் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இன்று மாலை அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து நேராக சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தார். கவச உடை அணிந்து அவர் வந்திருந்தார் என்பதும், அவர் வாக்களிக்கும் மையத்தில் இருந்த தேர்தல் அதிகாரிகள் அனைவரும் கவச உடை அணிந்து இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கனிமொழி எம்பி அவர்கள் வாக்களித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
அதேபோல் அதிமுகவைச் சேர்ந்த மதுசூதனன் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரும் கவச உடை அணிந்து வாக்களித்தார் என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout