திமுக எம்பி கனிமொழிக்கு கொரோனா: பிரச்சாரங்கள் ரத்து

  • IndiaGlitz, [Saturday,April 03 2021]

திமுக எம்பி கனிமொழி அவர்களுக்கு கொரனோ தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து அவர் தனது வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது

திமுக எம்பி கனிமொழி கடந்த சில நாட்களாக திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்தார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இன்று அவருக்கு கொரனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் இன்னும் சில மணி நேரங்களில் அவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு செல்ல இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது

மேலும் திமுக எம்பி கனிமொழி இன்றும் நாளையும் செய்யவிருந்த பிரச்சாரங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் திமுக வட்டாரங்கள் கூறுகின்றன. திமுக எம்பி கனிமொழிக்கு கொரனோ என்ற தகவல் அக்கட்சியின் தொண்டர்களுக்கு பேரதிர்ச்சியாக உள்ளது