புரிகிற மாதிரி பேசுங்க: கமல்ஹாசனை கலாய்த்த திமுக எம்.எல்.ஏ
Send us your feedback to audioarticles@vaarta.com
நேற்று கமல்ஹாசன் டுவிட்டரில் ஒரு வீடியோவை வெளியிட்டு அதன் பின்னர், என் பிள்ளைகள். அய்யகோ! ஒரு பிள்ளை எனை குத்திச்சாவதே மேல். என் வளர்ந்த சகோதரன் குற்றவாளியாய் தமிழ் பேசிக் குற்றம் ஏற்பதை தமிழ்இனம் சகியாது. இயற்கை எனைக் கொன்றே மகிழும் . அதன் முன் மகிழ உமக்கும் உரிமை உண்டு. கொன்றுதான் பாரும். வென்றே தீர்வேன்' என்று பதிவு செய்திருந்தார்
இந்த பதிவை பார்த்த கமல்ஹாசனின் ரசிகர்களே பலர், 'ஆண்டவரே புரியுற மாதிரி கருத்து சொல்லுங்க' என்று வேண்டுகோள் விடுத்திருந்தனர். ஒருசிலர் கமல்ஹாசனின் கருத்துக்கு தங்களுக்கு தோன்றிய விதத்தில் விளக்கம் அளித்தனர். இதனால் உண்மையிலேயே கமல் சொல்ல வந்தது என்ன? என்பது குறித்து பலருக்கு சந்தேகம் எழுந்தது.
இந்த நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவின் மகனும் திமுக எம்.எல்.ஏவுமான டிஆர்பி ராஜா அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் கமல்ஹாசனை கலாய்த்து ஒரு பதிவை போட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: கருத்து சொல்றதுன்னு முடிவாயிட்டா தெளிவா சொல்லுங்க. உங்களோட புலமைய மட்டும் வெளிப்படுத்தனும்னா புத்தகமா வெளியிடுங்க. இல்லனா கவி அரங்கம் நடத்துங்க. கட்சி நடத்தனும்னா, வாக்காளர்களை விடுங்க, முதல்ல உங்க கட்சில இருக்கனும்னு நினைக்கற கட்சிக்காரங்களுக்காவது நீங்க சொல்றது புரியனும்" என்று கூறியுள்ளார்
அரசியலில் இறங்கி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் கமல்ஹாசனுக்கு உண்மையிலேயே இருந்தால் அனைவருக்கும் புரிகிற மாதிரி கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்பதே பலரது எண்ணமாக உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments