சாய்பல்லவிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த திமுக எம்.எல்.ஏ!
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் சாய்பல்லவி தெரிவித்த ஒரு கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் சாய்பல்லவிக்கு ஆதரவாக திமுக எம்எல்ஏ தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையான சாய்பல்லவி சமீபத்தில் அளித்த பேட்டியில் ’காஷ்மீர் பண்டிட்டுகள் குறித்தும், பசு பாதுகாப்பு என்ற பெயரில் நடைபெறும் வன்முறைகள் குறித்தும் பேசி இருந்தார். அந்த பேட்டியில் ’தி காஷ்மீர் பண்டிட்’ திரைப்படத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னர் கொல்லப்பட்ட காஷ்மீர் பண்டிட்டுகள் குறித்து காட்டப்பட்டிருந்தது. அதேபோல் கோவிட் நேரத்தில் பசு மாடுகளை ஏற்றிக்கொண்டு சென்ற முஸ்லிம் ஒருவர் தாக்கப்பட்டு அவரை ஜெய் ஸ்ரீராம் சொல்ல வலியுறுத்தப்பட்டது. கடந்த காலத்தில் நடந்த தவறுக்கும் தற்போது நடந்து இருக்கும் சம்பவத்திற்கும் என்ன வித்தியாசம் என்று கேள்வி எழுப்பினார்.
அவரது இந்த கருத்து சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சாய்பல்லவிக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் பலரும் கருத்து தெரிவித்தனர். இந்த நிலையில் சாய் பல்லவிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்து தெரிவித்தவர்களுக்கு திமுக எம்.எல்.ஏ டிஆர்பி ராஜா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
சாய்பல்லவியை ஒருசிலர் கண்டித்து பதிவு செய்வதை பார்ப்பதற்கு அருவருப்பாக இருக்கிறது. இந்த கும்பலில் இருந்து ஜனநாயகம் தப்பிப் பிழைக்க வேண்டும். நமது இளைஞர்கள் இதுபோன்ற நிலைக்கு அடிமையாகாமல் தங்கள் கருத்தை தைரியமாக பேச முற்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
Disgusting to see people trolling @Sai_Pallavi92 for standing up for WHAT is RIGHT !!! more power to her ???? For democracy to survive this onslaught by the #GomiyumGang our youth must read and learn to speak their mind instead of getting herded by WAUnis !!!
— Dr. T R B Rajaa (@TRBRajaa) June 17, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments