திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் காலமானார்: பிறந்த நாளில் உயிரிழந்த சோகம்

  • IndiaGlitz, [Wednesday,June 10 2020]

கடந்த 2ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக எம்.எல்.ஏ அன்பழகன் சிகிச்சையின் பலனின்றி காலமானார். அவருக்கு வயது 62

கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த சென்னை சேப்பாக்கம் திமுக எம்.எல்.ஏ அன்பழகன் ஜூன் 2ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை குரோம்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருடைய உடல்நிலை ஆரம்பத்தில் தேறி வந்தாலும் பின்னர் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை அறிவித்தது

இன்று காலை மீண்டும் அவரது உடல் கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் வெளிவந்த நிலையில் சற்றுமுன் அவர் காலமானதாக மருத்துவமனை அறிவித்துள்ளது. மேலும் ஜெ.அன்பழகனின் உடல் தொற்றுநோய் விதிகளின் படி சுகாதாரத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது

ஜெ.அன்பழகன் அவர்களின் மறைவு திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்ளிட்ட பல தலைவர்களுக்கும் கோடிக்கணக்கான திமுக தொண்டர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது

கடந்த 2001, 2011, 2016, சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று 3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர் ஜெ.அன்பழகன் என்பது குறிப்பிடத்தக்கது. மறைந்த ஜெ.அன்பழகனுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மேலும் இன்று அவர் பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

அசோக்செல்வனின் அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு

கோலிவுட் திரையுலகில் அறிமுகமாகும் ஒவ்வொரு ஹீரோவுக்கும் ஒரே ஒரு சூப்பர் ஹிட் வெற்றி கிடைக்க காத்திருக்கின்றனர். ஒரு வெற்றி கிடைத்துவிட்டால் அவர்கள் முன்னணி நடிகர் பட்டியலில் இணைந்துவிடுவார்கள்

கிளாஸ் எடுத்தா தான் பீஸ் கேக்க முடியும்: ஆன்லைன் வகுப்பு குறித்து பிரபல நடிகர்

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் கடந்த மூன்று மாதங்களாக பள்ளி கல்லூரிகள் திறக்கப்படவில்லை

படப்பிடிப்பு தொடங்கும் முன்னரே மருத்துவமனையில் அட்மிட் ஆன பெண் இயக்குனர்! ஆபத்தான நிலையா?

இந்தியாவின் பளுதூக்கும் வீராங்கனையும் இந்தியாவுக்காக ஒலிம்பிக்கில் முதல்முதலாக தங்கப் பதக்கம் பெற்றுத் தந்தவருமான, கர்ணம் மல்லேஸ்வரி அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படம்

படப்பிடிப்பு தொடங்கும் முன்னரே மருத்துவமனையில் அட்மிட் ஆன பெண் இயக்குனர்! ஆபத்தான நிலையா?

இந்தியாவின் பளுதூக்கும் வீராங்கனையும் இந்தியாவுக்காக ஒலிம்பிக்கில் முதல்முதலாக தங்கப் பதக்கம் பெற்றுத் தந்தவருமான, கர்ணம் மல்லேஸ்வரி அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படம்

ஊடகத்திடம் திடீரென மன்னிப்பு கேட்ட குஷ்பு: என்ன காரணம்?

பிரபல நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு, ஊடகங்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக ஒரு ஆடியோ வைரலானதை அடுத்த இதுகுறித்து அவர் விளக்கமளித்துள்ளதோடு மன்னிப்பும் கேட்டுள்ளார்.