'தளபதி 63' அப்டேட்டுக்கு திமுக எம்.எல்.ஏ வாழ்த்து
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் நடித்து வரும் 'தளபதி 63' படத்தின் படப்பிடிப்பு இடைவெளியின்றி விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் புதிய அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என இந்த படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி தனது சமூகவலைத்தள பக்கத்தில் நேற்று நள்ளிரவு அறிவித்தார். இதனையடுத்து இதுகுறித்த ஹேஷ்டேக்கை விஜய் ரசிகர்கள் இந்திய அளவில் டிரெண்டாக்கி வருகின்றனர்.
இந்த நிலையில் அர்ச்சனா கல்பாதியின் இந்த தகவலுக்கு திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியதாவது:
'தளபதி 63' படத்தைப் பற்றிய அப்டேட்டுகளுக்காக படக்குழு ஆர்வத்துடன் காத்திருக்க வைத்துள்ளது. படக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பை பார்க்கும்போது இன்று மாலை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அல்லது டைட்டில் வெளியாக வாய்ப்பிருக்கிறது. படக்குழுவுக்கு வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.
ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ மட்டுமின்றி ஜெயம் ரவி நடித்த 'ஆதி பகவன் என்ற படத்தை தயாரித்தவர் என்பதும் ஒருசில படங்களை வெளியிட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
This team made everyone to wait eagerly on the update, seems like First Look & Title will be out today by 6PM. Advance congrats to @agscinemas. https://t.co/gfhAzTRWL8
— J Anbazhagan (@JAnbazhagan) June 19, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments