அமைச்சர் விஜயபாஸ்கரை தகுதி நீக்கம் செய்ய தமிழக கவர்னரிடம் திமுக தலைவர்கள் மனு

  • IndiaGlitz, [Wednesday,April 12 2017]

தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ் அவர்களை திமுக தலைவர்கள் இன்று மும்பையில் சற்றுமுன்னர் நேரில் சந்தித்தனர்.

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன், திமுக எம்பிக்கள் திருச்சி சிவா, ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் கவர்னர் வித்யாசாகர் ராவ் அவர்களை சற்று முன்னர் மும்பையில் உள்ள ஆளுநர் மாளிகையில் சந்தித்தனர்.

இந்த சந்திப்பின்போது ஜனநாயகத்துக்கு எதிராக செயல்படும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தனர். குறிப்பாக தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கரை பதவி நீக்கம் செய்யவும் அவர்கள் கவர்னரை வலியுறுத்தியதாக தெரிகிறது.

More News

நடிகை ராதிகாவுக்கு வருமான வரித்துறை சம்மன்

பிரபல நடிகரும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார், சமீபத்தில் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரனுக்கு ஆதரவு கொடுப்பதாக அறிவித்தார்...

டீ போட்டு கொடுக்காத மனைவியை கத்தரிகோலால் குத்தி கொன்ற கணவன்

அழகாக இல்லாததால் கணவரின் தலையில் கிரைண்டர் கல்லை தூக்கி போட்டு கொலை செய்த மனைவி குறித்த செய்தியை நேற்று பார்த்தோம். இந்நிலையில் டீ போட்டு கொடுக்க மறுத்த மனைவியை கத்தரிக்கோலால் குத்தி செய்த கணவன் குறித்த அதிர்ச்சி செய்தி ஒன்று இன்று வெளியாகியுள்ளது...

நல்ல படம் எடுத்தால் திருட்டு விசிடியால் பாதிப்பு வராது. கே.பாக்யராஜ்

கோலிவுட் திரையுலகமே திருட்டு விசிடியால் பெரும் பாதிப்பு ஏற்படுவதாக கூறி வருகின்றனர். திருட்டு விசிடியை ஒழிக்க கடும் நடவடிக்கையை எடுக்க போவதாக தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய தலைவர் விஷாலும் தெரிவித்துள்ளார்...

விஷாலின் ஒரு ரூபாய் திட்டம் விவசாயிகளுக்கு பயனளிக்காது. தங்கர்பச்சான்

நடிகர் சங்க பொதுச்செயலாளரான விஷால் சமீபத்தில் தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றதும், முதல் அறிவிப்பாக விவசாயிகளுக்கு உதவும் ஒரு ரூபாய் திட்டம் ஒன்றை அறிவித்தார்...

தளபதி ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தெறிக்க விடப்படும் 'தெறி'

இளையதளபதி விஜய் நடித்த சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றாகிய 'தெறி' திரைப்படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதியோடு ஒரு வருடம் நிறைவு பெறுவதை அடுத்து சென்னையில் உள்ள ஒரு திரையரங்கில் 'தெறி' திரைப்படத்தின் சிறப்பு காட்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்...