கமல் கருத்தே தமிழக மக்களின் கருத்து: ஸ்டாலின் ஆதரவு
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகநாயகன் கமல்ஹாசன் கடந்த சில நாட்களாகவே தமிழக அரசின் மீது கடுமையான விமர்சனம் செய்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. குறிப்பாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு செய்தியாளர் பேட்டியின்போது தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் உள்ளது என்று கூறியுள்ளார்.
கமலின் இந்த பேட்டி ஆட்சியாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதால் அமைச்சர்களில் சிலர் கமல்ஹாசனை ஒருமையிலும், அவரை கைது செய்ய வேண்டும் என்றும் கமல் எல்லாம் ஒரு ஆளே இல்லை, அவருக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறிவந்தனர்.
இந்த நிலையில் கமல்ஹாசனுக்கு ஆதரவாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். பீகாரை வீட தமிழகத்தில் லஞ்சம் மற்றும் ஊழல் அனைத்து துறைகளிலும் இருப்பதாக நடிகர் கமல் கூறியிருந்தார். மக்கள் கருத்தை பிரதிபலித்த நடிகர் கமலஹாசனை அமைச்சர்கள் சட்டத்தை காட்டி மிரட்டு கின்றனர். ஆட்சியாளர்கள் தங்கள் மீதான விமர்சனங்களில் உள்ள உண்மைகளை திருத்தி கொள்வதே ஜனநாயக ஆட்சி, கமல் மீது வன்மம் கொண்டு கருத்து தெரிவிப்பது விமர்சிப்பது ஜனநாயக உரிமையை பறிக்கும் செயல், நடிகரின் கமலின் கருத்தே தமிழக மக்களின் கருத்தாகும் என கூறினார்.
கமல்ஹாசனுக்கு ஆதரவாக மு.க.ஸ்டாலின் கருத்து கூறியுள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments