close
Choose your channels

என்னை பார்த்து சிரிக்க வேண்டாம். முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

Friday, February 17, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தின் முதல்வராக நேற்று பதவியேற்று கொண்ட எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்றே தனது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மு.க.ஸ்டாலின், 'நாளை நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவாரா? என்பது குறித்து எனக்கு தெரியாது. இருப்பினும் அவருக்கு நான் ஒரு பணிவான வேண்டுகோளை வைக்க விரும்புகிறேன். நாளை சட்டமன்றம் வரும் முதல்வர் பழனிச்சாமி அவர்கள் என்னை பார்த்து சிரிக்காமல் இருந்தால் நல்லது என்று கூறியுள்ளார். மேலும் இந்த அரசு மக்கள் விரோத அரசு என்றும் அவர் தெரிவித்தார்.

ஏற்கனவே சட்டமன்றத்தில் ஓபிஎஸ் அவர்கள் மு.க.ஸ்டாலினை பார்த்து சிரித்ததை அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா கடுமையாக விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment