பெண் பத்திரிகையாளர் தன்யாவுக்கு மு.க.ஸ்டாலின் ஆதரவு
Wednesday, August 9, 2017 தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல பெண் பத்திரிகையாளர் தன்யா ராஜேந்திரன் சமீபத்தில் விஜய் நடித்த 'சுறா' படத்தை எதிர்மறையாக விமர்சிக்கும் பதிவு ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருந்தார். இந்த பதிவுக்கு விஜய் ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். ஒரு கட்டத்தில் தன்யா ஆபாச வார்த்தைகளால் தாக்கப்பட்டார்.
தன்யாவுக்கு ஆதரவாக பலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில் ஒருசிலர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தன்யா திமுக தலைவர் கருணாநிதி குறித்து பதிவு செய்த சர்ச்சைக்குரிய பதிவுகளை தோண்டி எடுத்து சமூக வலைத்தளத்தில் பரப்பினர். இதனால் தன்யாவை திமுகவினர் சிலர் திட்ட ஆரம்பித்தனர்.
இந்த நிலையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தன்யாவுக்கு ஆதரவாக தனது சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் தனது பதிவில், ` ஜனநாயக நாட்டில் வாழும் யாருக்கும் கருத்து சொல்லும் சுதந்திரம் உண்டு . அதற்கு எதிராக அவர்களை அவமானப்படுத்துவது மிகவும் கண்டிக்கத்தக்க செயலாகும். எனவே அந்த பெண் பத்திரிக்கையாளருக்கு நியாயம் கிடைக்கவேண்டும்'' என்று பதிவு செய்துள்ளார்.
இந்த நிலையில் சென்னை போலீஸ் கமிஷனரிடம் தன்யா கொடுத்த புகார் காரணமாக இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments