திமுக தலைவர் கருணாநிதி கவலைக்கிடம்: தொண்டர்கள் அதிர்ச்சி
Send us your feedback to audioarticles@vaarta.com
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த பத்து தினங்களாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருடைய உடல்நிலை சீராக இருப்பதாக நேற்று வரை தலைவர்கள் கூறிவந்தனர்.
இந்த நிலையில் சற்றுமுன் வெளியான காவேரி மருத்துவமனையின் அறிக்கையின்படி திமுக தலைவர் கருணாநிதியின் வயது மூப்பு காரணமாக அவரது உடலில் உள்ள முக்கிய உறுப்புகளை செயல்பட வைப்பது சவாலாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை வெளியான நிமிடத்தில் இருந்து காவேரி மருத்துவமனை பரபரப்பு அடைந்துள்ளது.
மேலும் கருணாநிதி தொடர்ந்து மருத்துவ குழுவினரால் கண்காணிக்கப்பட்டு வருவதகவும், மருத்துவ உதவியும் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருவதாகவும், கருணாநிதியின் உடல் நிலை எப்படி ஒத்துழைக்கிறது என்பதை அடுத்த 24 மணி நேரம் கண்காணிக்க வேண்டியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments