அதிமுகவில் இணைந்த திமுக விவசாய அணி செயலாளர் சின்னசாமி!

திமுகவின் மாநில விவசாய அணி செயலாளராக இருந்தவர் சின்னசாமி. இவர் தற்போது தனது ஆதரவாளர்களுடன் கரூரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு இருந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.

கடந்த 1980 களில் அதிமுகவில் இருந்த இவர் 2 முறை எம்எம்ஏவாகவும் அமைச்சர் பதவியும் வகித்து வந்துள்ளார். பின்னர் எம்பியாகவும் பதவி வகித்த இவர் அதிமுகவில் ஏற்பட்ட அதிருப்தியால் கடந்த 2011 ஆம் ஆண்டு திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். பின்னர் திமுகவில் மாநில விவசாய அணி செயலாளராக செயல்பட்டு வந்த இவருக்கு அரவக்குறிச்சி மற்றும் மணப்பாறை தொகுதிகளில் எம்எல்ஏ சீட் கொடுக்கப்படும் என எதிர்ப்பார்ப்பு இருந்து வந்தது. ஆனால் அந்த வாய்ப்பு கிடைக்காததால் அதிருப்தி அடைந்த சின்னசாமி தன்னை எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் அதிமுகவில் இணைத்துக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சின்னசாமி அவர்கள் “12 ஆண்டுகள் வெயிலில் இருந்து இங்கு வந்துள்ளேன். நானும் முதல்வர் எடப்பாடியும் சகோதரர்கள். 12 ஆண்டுகள் அறிவாலயத்தில் நன்றாகத்தான் இருந்தேன். தற்போது தீய சக்திகள் உள்ளே உள்ளனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனியாக முடிவு எடுக்க முடியாத நிலையில் உள்ளார்.

மேலும் எடப்பாடி பழனிசாமி எளிமையானவர். அவர் தொடர்ந்து மக்கள் பணியாற்ற முதல்வராக மீண்டும் வருவார். கரூர் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும்” எனக் கூறினார். சின்னசாமி திமுகவில் இருந்து விலகியதை அடுத்து அக்கட்சித் தலைமை அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக அவரை நீக்கி வைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

அன்று எட்டப்பன்… இன்று செந்தில்பாலாஜி… பிரச்சாரத்தின்போது முதல்வர் காட்டம்!

அதிமுகவில் மாவட்ட அளவில் பல்வேறு பொறுப்புகள் வகித்த செந்தில்பாலாஜி அதிமுக அமைச்சரவையில் போக்குவரத்து அமைச்சராகவும் உயர்ந்தார்.

தனுஷ், விஜய்சேதுபதி படித்த பள்ளியின் தாளாளர் 'முதல் மரியாதை' பட நடிகரா?

நேற்று 67 வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் 'அசுரன்' படத்தில் சிறப்பாக நடித்த தனுஷ்க்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும், 'சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்த விஜய்சேதுபதிக்கு

பச்சையில் ஷிவானியும், நீலத்தில் ஷிவானி அம்மாவும்: மாலத்தீவு வைரல் வீடியோ!

பிக்பாஸ் புகழ் ஷிவானி சமீபத்தில் மாலத்தீவு சென்றார் என்பதும் அங்கிருந்து கொண்டு அவர் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படம் உள்ளிட்ட ஒருசில கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்தார் என்பதும் தெரிந்ததே

ஷங்கரின் அடுத்த இரண்டு படங்களிலும் ஹீரோயின் இவர் தான்!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர், ராம்சரண் தேஜா நடிக்கும் அடுத்த படத்தை இயக்க உள்ளார் என்பதும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பது தெரிந்ததே 

நாளைமுதல் பிரச்சாரம்...!  கேப்டன் பராக்...! 

தமிழகத்தில் தேர்தல் திருவிழா களை கட்டும் நிலையில், தேமுதிக தலைவர் கட்சி சார்பாக பிரச்சாரத்தை துவங்குவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.